இலங்கை கடற்படை அதிகாரியாக செயற்படும் யோஷித ராஜபக்ச இராணுவ நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த காலங்களில் அவர் கடற்படை சட்டத்திற்கு எதிராக, தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காக தனது கடற்படை அதிகாரத்தை பயன்படுத்திய சம்பவம் தொடர்பிலே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.
யோஷித ராஜபக்ச கடற்படை அதிகாரியாக செயற்படுகின்ற சந்தப்பத்தில் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவர் பதவியில் இருந்தமையே, இராணுவ நீதிமன்றத்திற்கு செல்ல ஒரு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் CSN தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக யோஷித்த ராஜபக்ச செயற்பட்ட நிலையில் அது இராணுவ சட்டத்திற்கு புறம்பானதென சட்டதரணிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக கடந்த காலங்களில் யோஷித ராஜபக்ச நிறைய வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த பயணங்களுக்கு கடற்படை உயர் அதிகாரிடம் கடிதம் மூலம் எவ்வித அனுமதிகளையும் பெற்றுகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
இவ்வாறு உயர்மட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் 30 தடவைகளுக்கு மேல் எவ்வாறு வெளிநாடு செல்ல முடியும் என்பது தொடர்பில் விரேட விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
இராணுவ நீதிமன்றில் இந்த விடயங்கள் நிரூபிக்கப்பட்டால் யோஷித்த ராஜபக்சவுக்கு தண்டனை கிடைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

No comments
Post a Comment