Latest News

January 14, 2016

இந்திய உளவுத்துறை ரா (RAW) வுக்கு தண்ணி காட்டிய கிட்டண்ணை..!! -ஈழத்து துரோணர்...!!!
by admin - 0

இந்திய உளவுத்துறை ரா (RAW) வுக்கு
****************************************************
 தண்ணி காட்டிய கிட்டண்ணை..!!
**********************************************
ஈழத்து துரோணர்...!!!
*****************************  
கிட்டண்ணை பற்றியும் அவரது வீரம்,ஆளுமை,போராட்ட குணம் எல்லாம் கேள்விப் பட்டிருப்போம் அவர் சம்பந்தமான பல கட்டுரைகள் படித்திருப்போம்,கானொளிகளிலும் பாத்திருப்போம். அனால் அவரது இறுதி நாள் பற்றி அறிந்தவர் குறைவாகவே இருக்கும் என்றே நம்புகின்றேன். அந்த கணங்களை உங்களோடு பகிர விரும்புகின்றேன். எனக்கும் கிட்டண்ணைக்குமான சந்திப்பு 

1980களின் இறுதியில் மணலாற்றில் இடம் பெற்றது. இரண்டாவது முறையாக நான், அவரை சந்திக்கும் போது நான் யாழில் காயமடைந்து காட்டுக்கு வந்திருந்தேன். அப்போது ஓய்வில் இருந்த நான் கூடிய நேரத்தை கிட்டணை, சங்கரண்ணை போன்றோருடன் செலவழிப்பதே வழமை. நான் இளையபோராளி என்பதால் அவர்களது சண்டை அனுபவங்களை கேட்டபடி இருப்பேன்.  

அந்த நேரங்களில், அவர் யாழ் நிலவரம் பற்றி துருவித்,  துருவி என்னிடம் கேட்பார்.  அப்போதெல்லாம் யாழை நினைத்து, அவரது ஏக்கம் அவரில் தெரியும். 1980களில் சிங்கள இராணுவத்தை சில நூறு போராளிகளை வைத்து முகாமினுள் முடக்கிய பெரும் வீரனல்லவா எங்கள் கிட்டண்ணா.! 

அவர் யாழ் மக்களின் வாழ்வியலில் ஒன்றியிருந்தார். ஒரு கால் இழந்த பின்னும் அவர் ஓயவில்லை. சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்த பின், மணலாற்றில், எமது முகாமில் இரவு நேரங்களில் திடீர் என விசில் சத்தம் கேட்கும். எல்லோரும் ஓடிச்சென்று நிலை எடுக்க வேண்டும். அது பகலிலும் தொடரும். அத்தோடு சிறப்பு பியிற்சிகளும் நடக்கும். போராளிகள் சும்மா இருப்பதை கண்டால் உடனே கிட்டண்ணையின் விசில் சத்தம் கேட்கும். 

அதனாலேயே கிட்டண்ணையை கண்டால் இளைய போராளிகள் ஏதாவது வேலை செய்வது போல பாவனை செய்வார்கள்,அல்லது அவரது கண்ணில் தட்டுப்படாது சென்று, வருவார்கள். இதை பார்த்து கிட்டண்ண புன்னகைப்பார். 

இந்த நேரங்களில் என்னை பார்த்து சங்கரண்ணை  அடிகடி சொல்லுவார் காயப்பட்டதால நீ தப்பிற்றாய், இன்னும் எவ்வளவு நாளைக்கு பாப்பம்  என்பார். அது தான் உண்மையும். நானும் இரவு சென்றி பாக்கும் கள்ளத்திலும், கிட்டண்ணைக்கு பயத்திலையும் கொஞ்சம் ஏலாதது போல நடிப்பேன் அதிலையும் ஒரு சந்தோசம் அந்த நேரத்தில். இனிமையான பொழுதுகள் அவை. 

அப்போதெல்லாம் அண்ணை, சங்கரண்ணைக்கு  சொல்லுவார் ஆமிய பாத்து ஓடாத பெடியள் கிட்டனை பாத்து ஓடுறாங்கள் என்பார், எல்லோரும் சிரிப்பார்கள், அது தான் அண்ணையின் மறுபக்கம். முக்கியமான நேரங்கள் தவிர்ந்த நேரங்கள் தவிர அண்ணையின் நக்கல் நையாண்டிகளுக்கு அளவே இருக்காது. 

அண்ணையின் நகைச்சுவை உணர்வு  கூட இருந்தவர்களுக்கு மட்டுமே  அது தெரியும். இப்படியே சிங்கள அரசோடு பேச்சு வாத்தை நடந்து ஒரு புரிதல் வந்த நேரம் கிட்டண்ணை கொழும்பு சென்று அப்படியே லண்டன் செல்ல ஆயத்தமானார். எல்லோர் மனங்களிலும் ஒரு இறுக்கம் அதை முதலில் உடைத்தது கிட்டண்ணை தான். அன்று இரவே கிட்டண்ணை, அண்ணையை அணைத்த படி கண்ணீர் விட்டார்.  

அடுத்த நாள் எல்லோரது கண்ணீருடனும் (அண்ணை உட்பட) கிட்டண்ணையும் அழுத படியே பயணமானார். அதை பார்த்த போது இயக்கம் என்பதையும் தண்டி ஒரு குடும்பம் போல உணர்ந்தேன்.! 
கிட்டண்ணை லண்டன் சென்று புதிய நிர்வாகங்களை அமைத்து சீர் செய்து கொண்டு இருந்த காலங்களில் இந்திய ரா உளவுத்துறையால் (raw) தொடர்பெடுக்கப் பட்டார். 

நயவஞ்சகமாக இயக்கத்துக்கும் அண்ணைக்கும் எதிராக அவரை திசை திருப்பும் முயற்சியை ஆரம்பித்தது. அதன்படி லண்டனில் வைத்து கிட்டண்ணை அடிக்கடி ராவினால் சந்திக்க பட்டு அவரது மனதை மாற்ற முயற்சி செய்ய பட்டது. நிலைமையை உணர்ந்த கிட்டண்ணை விட்டு பிடிக்க நினைத்தார். சில நாட்களின் பின் அடுத்த நாள் வரும்படியும், தனது முடிவை அன்று கூறுவதாகக் கூறி அந்த அதிகாரிகளை அனுப்பி வைத்தார். 

அன்றே இது பற்றி அண்ணையிடம் கூறி தொலைதொடர்பில் உரையாடி முடிவு எடுக்கபட்டது. அதன்படி சில நாட்கள் இழுத்தடித்த பின் ஒரு  நாள் வந்த ரா அதிகாரிகளுக்கு சம்மதம் தெரிவித்தார். அதன் பின் கிட்டண்ணைக்கு மாதம் மாதம் பெரும் தொகை பணம் செலவுக்கென்று கொடுக்கப் பட்டது. (உளவாளிகளுக்கு பணம் கொடுப்பது உளவு வலையமைப்பில் சாதாரண நிகழ்வு) கிட்டண்ணையும் அந்த பணத்தில் தனது செலவு போக , மிகுதியை வெளிநாடுகளில் மக்களிடம் சேர்க்கும் பணத்துடன் ஆயுதம் வாங்க அனுப்பி விடுவார். 

இப்படி அவர் வீரச்சாவடையும் வரை ரா வுக்கு கயிறு விட்டு பெரும் தொகை பணத்தை வாங்கியிருந்தார். 1991இல் ராஜீவ் காந்தி மரணத்தின் பின் கிட்டண்ணையை தொடர்பு கொண்ட ரா அமைப்பு அதில் புலிகளுடனான பங்கு பற்றி கேட்டிருந்தது. அதற்கு கிட்டண்ணை தனக்கு தெரிந்த வரை அதை புலிகள் செய்யவில்லை என்று அடித்து கூறியிருந்தார்.

இதை அவர்கள் மேலிடத்திற்கு தெரிய படுத்தியிருந்தார்கள். ஆனால் அந்த விசாரணையில் ஈடுபட்டிருந்த இன்னொரு உளவமைப்பான IB புலிகள் மேல் குற்றம் சுமத்தி சில ஆதாரங்களையும் திரட்டி குற்றம் சாட்டி இருந்தது. 

அதன் பின் விழித்துக் கொண்ட ரா கிட்டண்ணையை ஒரு வித கடுப்பில் அவரை சந்தேக வட்டத்துக்குள் கொண்டு வந்தது.  அவரை லண்டனில் தொடர் கண்கானிப்பினுள் வைத்திருந்தது.  இதன் பின் கிட்டண்ணையின் நடமாட்டம் அவதானிக்கபட்டு, ரா வால்  பின் தொடரப் பட்டது. இதை கிட்டண்ணையும் நன்கு உணர்ந்திருந்தார். 

1992இன் இறுதிப்பகுதியில் தனது பொறுப்புகளை தான் தெரிவு செய்தவர்களிடம் ஒப்படைத்து விட்டு தாயகம் செல்ல ஏற்பாடு செய்தார். தன்னை கண்காணிக்கும் ராவுக்கு தண்ணி காட்ட முடிவெடுத்தார். 

அதன் படி KP என்று அழைக்கப்படும் புலிகளின் நிழல் உலகை அன்றைய நேரத்தில் கைகளில் வைத்திருந்த குமரன் பத்மநாதனிடம் தொடர்பு கொள்ளப்பட்டது. அப்போது ரா வின் கண்காணிப்பை உடைக்கும் முகமாக குறிப்பிட்ட திகதி,நேரத்திற்கு சிங்கபூருக்கு பயணசீட்டு ஒன்று கிட்டண்ணையால் போடப்பட்டது. 

அது உடனே ரா வுக்கு தெரிய வந்தது. அதை தான் கிட்டண்ணையும்,KP யும்  எதிர்பார்த்தார்கள். அந்த நாளுக்கு முதல் நாள்  KP யாள் சுவிஸ்க்கு போட்ட இன்னொரு பயண அனுமதியுடன் ரா விற்கு கயிறு கொடுத்து கிட்டண்ணை சுவிஸ்  சென்று அங்கிருந்து KP யின் ஒழுங்கில் போலந்து சென்றார். 

அங்கு சில நாட்களின் பின் கிட்டண்ணையை சந்தித்த KP அங்கிருந்து உக்றேனுக்கு கொண்டு சென்று அங்கு சில நாள் இருந்தபின், தாய்லாந்துக்கு அழைத்துச்  சென்று, அங்கிருந்து தாயகம் செல்ல தயாராக இருந்த கப்பலில் கடலில் வைத்து ஏற்றி விடபட்டார். 

இங்கு லண்டனில் ரா தலையை உடைத்துக் கொண்டிடு, கிட்டண்ணை மாயமானதை ஜீரணிக்க முடியாது இருந்தது. இந்த நேரத்தில், இந்திய அரசின் நீர்மூழ்கி கப்பலொன்று, தற்செயளாக, இவர்களது தொலைதொடர்பு உரையாடலை ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்தது. இந்த தகவல் ராவுக்கு பரிமாறப்பட்டது. உடனே அவர்கள் அந்த நேரத்தில் தொடர்பில் இருந்த மாத்தையாவிடம் கிட்டண்ணை பற்றி ராவால் கேட்கப்பட்டது (அந்த நேரத்தில் மாத்தையா ரா வின் ஆள்) . 

அடுத்த நாள் மாத்தையாவும் அவரால் தனக்கு விசுவாசமாக மாற்றப்பட்டிருந்த அண்ணையின் தொலை தொடர்பாளன் முருகன் ஊடாக கிட்டண்ணையின் பயணம் அறிந்து, ரா வுக்கு கூறப் பட்டது. (மாத்தையாவின் கைதின் போது முருகனுக்கும் மரண தண்டனை வழங்கப் பட்டது) அதன் படி இதை இந்திய கடல் படைக்கு அறிவித்து சர்வதேச கடலில் வலை விரித்து காத்திருந்தது இந்திய பாசிசம். 10/01/1993 அன்று இந்திய கடல் படையின் கதுவி(radar) இவர்களது கப்பலை இனம் கண்டது. 

அவர்களது கப்பல் சர்வதேச கடலில் இருந்தமையால் இந்தியகடலினுள் வரும் வரை காத்திருந்து புலிகளின் M V அகத் என்னும் கப்பல் 14/01/1993அன்று சுற்றிவளைக்கப் பட்டது. அதில் இருந்த கிட்டண்ணையிடம் தொடர்பெடுத்த இந்திய கற்படை அதிகாரி கப்பலுடன் சரணடையும் படி கூறியது. அதற்கு கிட்டண்ணை மறுத்து இருந்தார். அப்படியே கப்பலையும் கொஞ்சம் கொஞ்சமாக எமது எல்லைக்கு நகர்த்தி கொண்டிருந்தார். தொடர்ந்து ஒலிபெருக்கியிலும் சரணடையும் படி அறிவித்தார்கள். ஆனால் கிட்டண்ணை மறுத்து விட்டார்.! 

அதை தொடந்து எச்சரிக்கை வேட்டை தீர்த்த போதும் அவர் அசையவில்லை. 15/01/1993 சிங்கள கடற்படை காட்சிக்குள் நுழைகிறது. இரு அரசுகளும் அவரை உயிரோடு பிடிக்கவே முயற்சி செய்து கொண்டிருந்தனர். இங்கு புலத்திலும் எமது தலமைகளினால் இந்திய, தமிழ்நாட்டு தொடர்புகள் ஊடாக முயற்சி செய்யப்பட்டது. அது பலனளிக்காது போனமையால் எமது கடற்படை கொண்டு தாக்கி ஒரு மீட்பு நடவடிக்கை செய்யவும் ஆராயபட்டது. 

அதவும் சில இராஜதந்திர காரணங்களால் கைவிட பட்டது. 15ம் திகதி பொட்டு அம்மானுடன் கிட்டண்ணை உரையாடினார். இதில் பொட்டு அம்மானுக்கும் கிட்டண்ணைக்குமான நட்பு பற்றி கூற விரும்புகிறேன். 1980 இன் ஆரம்ப காலங்களில்  இருவரும் ஒன்றாக திரிந்து போராட்டத்தை வளர்த்தவர்கள். இதனால் அலாதியான நட்பு இருவற்குள்ளும் இருந்தது. அதை நான் இருவரையும் சேர்த்து பாக்கும் போது காண முடிந்தது. 

கிட்டண்ணை லண்டன் போகும் போது அம்மான் யாழில் இருந்தமையால் அவருக்கு ஒரு கடிதம் என்னிடம் தந்தார் போகும் போது  கொடுக்கும் படி.. அந்தளவு தூரம் அண்ணையை போல அம்மானையும் அவர் நேசித்தார். அதே போல் லண்டன் போன பின்பும் தனது துணைவியாருக்கு கடிதம் எழுதும் போதெல்லாம் அம்மானுக்கும் ஒரு கடிதம் அதில் வரும். 

அவர்களது நட்பின் முடிவுரை எழுதும் நாளன்று   அவர் கிட்டண்ணை மேல் உள்ள அன்பினாலும், அவர் மூலம் எமது அமைப்புக்கு தொடந்து வழிகாட்டலுக்கான சேவை கிடைக்க வேணும் என்ற ஆதங்கத்திலும் , நட்பினாலும் உந்தப்பட்டு கிட்டண்ணையை சரணடையும் படியும்,சரணடைந்தால் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை ஊடாக(கிட்டண்ணை இதற்கு முன்னும் இந்திய அரசால் கைது செய்யப்பட்டு விடுவிக்க பட்டவர்)  மீண்டும் நாடு திரும்ப முடியும் என்று கூறவும், கிட்டண்ணையிடம் இருந்து கடும் தொனியில் கண்டனத்துடன் கூடிய மறுப்பே வந்தது. 

அதன் போது அவர் கூறினார் இயக்கத்தை வழிநடத்தும் நாங்களே கையை தூக்கி சரணடைந்தால் சாதாரண போராளிகளும் சரணடைய ஆரம்பித்தால் இயக்கத்தின் கொள்கை அழிந்து போகும். நாங்கள் உருவாக்கி கடைப்பிடித்த கொள்கையை மீறி அந்த தவறை நான் செய்ய மாட்டேன்.!

ஒரு பிழையான முன்னுதாரனமாக நான் இருக்க மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்த பின் அண்ணையுடனும் தொலைத் தொடர்பில் உரையாடிய பின் 16/01/1993 காலை கப்பலில் கொண்டு வந்த தளபாடங்களை அழித்த பின் கப்பலில் இருந்த 3 மாலுமகளை (பொதுமக்கள் ) குதித்து நீந்தி சரணடையும் படி கூறிவிட்டு கப்பலை வெடிக்க வைத்து எமது எதிரிகளுக்கு புலிகள் யார் என்பதை மீண்டும் நிருபித்தார்கள்.!! 
நினைவுகளுடன்..துரோணர்
« PREV
NEXT »

No comments