Latest News

January 04, 2016

'மீள்குடியேற்றம் பூர்த்தியடைந்த பின்னர் பொங்கல் விழா நடத்துங்கள்'
by Unknown - 0

உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள 5 ஆயிரத்து 710 ஏக்கர் நிலங்களையும் விடுவித்து, முகாம் மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களையும் மீளக்குடியமர்த்திய பின்னர் யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவை கொண்டாடுங்கள் என வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன்  தெரிவித்தார்.

மக்கள் இன்னமும் நலன்புரி நிலையங்களில் வாழும் நிலையில் இவ்வாறான விழாக்களை நடத்துவது அம்மக்களுக்கு வேதனையைத் தரும். எனவே மக்களின் மீள்குடியேற்றத்தின் பின்னர் இவ்வாறான விழாக்களை நடத்தலாம் என்றார்.

தேசிய பொங்கல் தின விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வலி. வடக்கு இராஜேஸ்வரி ஆலயத்தில் விசேட வழிபாடுகளும் வீரசிங்கம் மண்டபத்தில் பொங்கல் விழாவும் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments