Latest News

January 26, 2016

விரிவடையும் யாழ் நிலவெடிப்பு
by admin - 0

யாழ். அச்சுவேலி நவக்கிரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலவெடிப்பு மேலும் விரிவடைந்துள்ளதாக யாழ்.பல்கலைகழக புவியியற்துறை பேராசிரியர் ரீ. ராஜேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அச் சம்பவம் தொடர்பில் புவியியற்துறை பேராசிரியர் தெரிவிக்கையில் ,

கடந்த 23ம் திகதி  நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பினை தொடர்ந்து அவதானித்து வந்த வேளை இந்த வெடிப்பானது 1.5 சத மீற்றர் அகலத்துக்கு விரிவடைந்து உள்ளது.

அத்துடன் மேலும் புதிய இடங்கள் சிலவற்றிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டு உள்ளதுடன் வெடிப்பு ஏற்பட்ட பகுதிகள் கீழ் இறங்கி உள்ளன. நிலத்தில் ஏற்படும்  வெடிப்பானது சுண்ணக்கல் பாறைகளில் ஏற்பட்ட விரிசல்கள் காரணமாகவே ஏற்பட்டது நில நடுக்கத்தால் ஏற்படவில்லை என தெரிவித்தார்.

அதேவேளை  நிலத்தில் ஏற்பட்டு உள்ள வெடிப்பு தொடர்ந்து விரிவடைந்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவக்கிரி பகுதியில் கடந்த 23ம திகதி அதிகாலை வேளை திடீர் என நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டது. அதனால் ஒரு வீடு சேதமடைந்து இருந்ததுடன் சுமார் 500 மீற்றர் தூரம் வெடிப்பு ஏற்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments