முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் புதல்வர் யோசித உள்ளிட்ட அறுவர் இன்று கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக FCID வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச நிதியை CSN தொலைகாட்சி நிறுவனத்துக்காக முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் யோசித உள்ளிட்ட அறுவர் கைது செய்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக FCID வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் எமது செய்திபிரிவுக்கு தெரிவித்தன.
கடற்படை தலைமயகத்தில் யோசிதவிடம் வாக்குமூலம் பெறப்பட்டு தற்போது FCID க்கு அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஸவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகளை நடாத்தி வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
இந்த விசாரணைகள் கடற்படை தலைமையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சுமார் காலை 9.30 மணி அளவில் அழைக்கப்பட்டிருந்த யோஷித்த ராஜபக்ஸவிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நிதி மோசடி பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமையினால், அதற்கான காரணம் இதுவரை தமக்கு தெரியவில்லை எனவும் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த செய்தியினை கொழும்பு பீ.பீ.சி. ஊடகவியலாளர் அசாம் அமீனும் தனது ட்விட்டர் வளைதளத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யோஷித்தவை கைது செய்வது தொடர்பில் பொலிசார் தீவிரம்?
முன்னாள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும் , கடற்படை அதிகாரியுமான யோசித்த இன்றைக்குள் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தில் நிகழ்ந்துள்ள நிதிமோசடிகள் தொடர்பில் அதன் பணிப்பாளர்களில் ஒருவரான ரொஹான் வெலிவிட்ட இன்று காலையில் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே மேற்குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தனது தம்பியையும் கைது செய்வதற்கு பொலிசார் முயன்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் யோஷித்த ராஜபக்ஷவை கைது செய்வது தொடர்பில் கடற்படையினரிடம் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் பணிப்பாளர்களான ரொஹான் வெலிவிட்ட மட்டுமன்றி ஏ.ஆர். பெர்னாண்டோவும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே கட்சியில் சரிந்து வரும் தனது செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் யோஷித்த உள்ளிட்டோரை கைது செய்யுமாறு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசி ஊடாக உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் ஒரே வாகனத்தில் பயணித்தவாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், தேர்தல் ஒன்று நெருங்கி வரும் நிலையில் மஹிந்த குடும்பத்தினர் கைது செய்யப்படுவதானது அவர்கள் மீது பொதுமக்களின் அனுதாபம் அதிகரிப்பதற்கு வழியேற்படுத்தி விடும் என்று அவதானிகள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் அரசியல் செயற்பாடுகளில் சிறுபிள்ளைத்தனமாக செயற்படும் ஜனாதிபதி , சந்தர்ப்பமறியாது மஹிந்த குடும்பத்தினரின் கைது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment