2009ம் ஆண்டு மே மாதம் வெள்ளைக்கொடியோடு சென்று இலங்கை ராணுவத்திடம் சரணடைந்து, பின்னர் கொல்லப்பட்டார்கள் புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர்.
இவர்களது மடிக் கணனி(லேப்-டொப்) இன்றுவரை இலங்கை புலனாய்வுப் பிரிவினரிடம் தான் உள்ளது. இருப்பினும் 7 வருடங்கள் கழித்து, நேற்று முன் தினம் அதனை யாரோ சுவிஜ் ஆன் செய்து இன்ரர் நெட் இணைப்பை கொடுத்துள்ளார்கள்.
ஏற்கனவே புலித்தேவனோடு பலர் , “ஸ்கைப்” தொடர்பில் இருந்துள்ளார்கள். அவர்களில் பலர் புலித்தேவனுடைய ஸ்கைப் ஐ.டியை அழித்துவிட்டார்கள். இருப்பினும் ஒரு சிலர் அதனை அப்படியே விட்டுவைத்துள்ளார்கள்.
இன் நிலையில் நேற்று முன் தினம் , பகல்வேளை(இலங்கை நேரப்படி) குறித்த மடிகணணி உயிர்ப்படைந்துள்ளது . இதனால் ஏற்கனவே கம்பியூட்டரில் இருந்த ஒரு சிலருக்கு, புலித்தேவன் ஆன் -லைனில் வந்துவிட்டதாக ஸ்கைப் காட்டியுள்ளது.
இதுபோன்றதொரு சம்பவம் 2010ம் ஆண்டும் நிகழ்ந்தது. இன்றுவரை இலங்கை புலனாய்வுப் பிரிவினர் புலித்தேவனின் லேப் டொப்பை ஏதோ ஒரு தேவைக்காக பாவித்து வருகிறார்கள் என்பது மட்டும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் இதனை வைத்து அவர்கள் என்ன செய்ய முனைகிறார்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. புலித்தேவனை ஸ்கைப் மூலமாக இணைத்துவைத்திருந்த பலர் தற்போது அவரது ஐ.டியை அழித்துவிட்டபோதிலும் ஒரு சிலர் இதுவரை அதனை அழிக்கவில்லை. இன் நிலையில் தாமும் அதனை அழித்துவிடுவதே நல்லது என்று அவர்கள் பலர் கதைப்பதை அறிய முடிகிறது. ஸ்ரீலங்கா புலனாய்வு துறை எதற்காக இப்பவும் அவர்களின் SKYPE யை பாவிகிறார்கள் என்பது மிகவும் கேள்விக்குறியாக இருக்கிறது அதை வைத்து இன்றும் சில நபர்களை வலைவிரிப்பது புலனாகிறது.
No comments
Post a Comment