ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு விடுத்த அழைப்பிற்கு ஏற்ப, அல் ஹூசெய்ன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உள்ளிட்ட முக்கிய ஆளும் கட்சி பிரமுகர்களை ஹூசெய்ன் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்புக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவரின் இலங்கை விஜயம் தொடர்பிலான திகதி நிர்ணயம் தொடர்பில் கடந்த 19ம் திகதி ஜெனீவாவில் கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அல் ஹூசெய்ன் இலங்கை விஜயம் செய்யும் காலப்பகுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜூம் இலங்கை விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment