அரச சேவையில் மேலுமொரு தொகுதி பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதனடிப்படையில் 2600 பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
அண்மையில் பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில், நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதில் 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனங்களை பிரதமர் ரணில் விக்கரமசிங்க வழங்கி வைக்கவுள்ளார். இது தொடர்பான நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
No comments
Post a Comment