Latest News

January 16, 2016

பிரித்தானியாவில் தமிழின அழிப்பு நாள் பேரணி
by admin - 0

பிரித்தானியாவில் தமிழின அழிப்பு நாள் பேரணி!

முள்ளிவாய்க்கால் விடுதலைப் போரின்முடிவல்ல, அதுவேஆரம்பம்என்பதை மே 18 தமிழின அழிப்பு நாளில் நாம் பேரெழுச்சிகொண்டு 18-05-2016 அன்று பிரித்தானியாவில்  நடைபெறும் மாபெரும் பேரணியில்எடுத்துரைப்போம்.

மே 18 எங்கள் தேசம் வலிசுமந்தநாள். . எங்கள் சொந்தங்கள் எண்ணிக்கை தெரியாதபடி கொத்துக் கொத்தாகக் கொலையுண்டநாள்.. 

சிங்கள இனவாதத்தின் கொடுங்கரங்கள் தமிழீழ மண்ணை தமிழரின் குருதியால் சிவக்கவைத்த நாள்குண்டுவீச்சுக்கும், எறிகணைக்கும் பதுங்கிய குழிகளுக்குள் மண் மூடிப்புதைக்கப்பட்ட நாள்...

மே 18 மட்டுமல்ல... முள்ளிவாய்க்காலும் எங்கள் அவலத்தின் சாட்சிகளாக வரலாற்றில் பதிவாகிப்போயுள்ளது. ஆனாலும், 'நாங்கள்வீழமாட்டோம்' என்றஉறுதியுடன்மீண்டும்எழுந்துநிற்போம். நாங்கள் அழமாட்டோம்... மீண்டும் எழமுடியாத கோழைகளே அழுதுதம்மை ஆற்றிக்கொள்வார்கள்... அழுவதுஅல்ல... எழுவதேஎ ங்கள்வரலாறு... புதைந்தகுழியிலிருந்தும், எரிந்தசாம்பலிலிருந்தும்;,சிதறிய ஆழியிலிருந்தும் எங்கள் தேசியப்புதல்வர்கள் எழுந்துவருவார்கள்... எங்கள் தேசத்து மக்கள் உயிர்த்தெழுவார்கள்... 'விழவிழஎழுவோம்...' என்றே அவர்கள் வேதமாய் ஒலித்துச் சென்றுள்ளார்கள்.
நீங்களும், நாங்களும் ஒன்றாகக்கை கோர்த்து வீச்சாக எழும் நாளில் தமிழீழ மண்ணில் அவர்கள் எல்லாம் எழுந்துவருவார்கள்...  வித்தாக வீழ்ந்தவர்கள் விதியைவெல்வார்கள்...  இதுசத்தியம்...

தம்மை உரமாக்கி எம்மைக் காத்தவர்கள் மீண்டும் வருவதற்கு நாம் எத்தனையோ பணிகள் செய்யவேண்டும். ஒன்றாய்... பலவாகி... ஓரணியில்நின்று... எங்கள் தேசத்தின் மண்மீட்கும் போரில் நாம்பலம் பெறவேண்டும்...

எங்கள் தலைவர் காட்டியபாதை இப்போதும் தெளிவாகத் தெரிகின்றது... முள்ளிவாய்க்கால் முடிவல்ல... அது இன்னொரு முகைவெடிப்பு ஆகின்... எதற்காக நாம் அழவேண்டும்...? இறப்பிற்குத்தான் துக்கம்... உயிர்ப்பிற்கு ஏதுதுக்கம்...?

மண்ணை மீட்கும்மறவர்களாக, போர்க்களத்தில் விட்ட பணிகளை நாம் தொடர்வோம்... வெற்றி நமதாகும் வரை உறக்கம் கழைவோம்...
துக்கம்கொள்ளவும், துயர்பகிரவும்இதுசாவீடல்ல... சரித்திரம்படைக்கும் மாவீரம்...

நாங்கள் வீதிகள்தோறும் வெம்பி வெடித்தழுத காலத்தில்... எக்காளமிட்டு வெற்றி நகைபுரிந்த சிங்களதேசம்... இப்போது வெட்கி முகம் புதைத்து நிற்கின்றது... எங்கள் உறவுகளைக் காப்பாற்றுங்கள் என்று நாம் வடித்த கண்ணீரிலும் அதிகமாக, சிங்கள ஆட்சியாளர்கள் தம்மைக் காப்பாற்றும் படி உலகமெல்லாம் இரஞ்சிவலம் வருகின்றார்கள்.
நாம் தோற்றுப்போகவில்லை... முள்ளிவாய்க்கால் எங்கள் தோல்வியின் குறியீடல்ல...

மே 18 நாம் அழுவதற்கான நாளல்ல...
அறை கூவல்விடுக்கும் நாள்...

சர்வதேச சமூகம் தமிழின அழிப்புக்கான அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தவேண்டும்எனவும் ,தமிழீழ மக்கள் தமது அரசியல்விருப்பங்களை வெளிப்படுத்தும் விதத்தில் ஐநாவின் கண்காணிப்பில் வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்படவேண்டும்.

இதில் புலத்தில் வாழும் தமிழ்மக்களுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையோடு இப் பேரணியைநகரவைப்போம் .
தமிழினம் காலம்காலமாய் நசுக்கப்படுவதை சர்வதேசசமூகம் நன்கு அறிந்திருந்த போதிலும் மௌனமாக இருப்பது ஏன்? இனப்படுகொலை தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை இலங்கையின் தற்போதுள்ள ஆட்சிமாற்றத்தைக்காரணம் காட்டி தாமதித்தது நீதிமறுக்கப்பட்டதுக்குசமனாகும். தாயக, தமிழக, புலத்துமக்களின் அயராத போராட்டத்தின் ஊடாகவே இன்று சர்வதேசம் கண் விழித்துள்ளது. தொடர்ந்தும் போராடுவோம்.

சர்வதேசம் அமைதியை கலைத்து ஒடுக்கப்படும் தமிழ் இனத்திற்கு விடிவைப்பெற்றுத்தரும் வரைபோராடுவோம்.  இந்த உரிமைக் கோசத்தை மே 18 ஆம் திகதி ஒருமித்தகுரலில் ஓங்கிஒலிப்போம் சனத்திரளாய்வாருங்கள்.

அழிவுகளும் அடக்குமுறைகளும் தமிழ்இனத்திற்கு புதிதல்ல விழவிழ எழுவோம்.முள்ளிவாய்க்கால் விடுதலைப்போரின் முடிவல்ல அதுவே ஆரம்பம் என்பதை எடுத்துரைப்போம் பேரணியாய் ஓரணியில் வாருங்கள்.                                                                         மேலதிகமாக தொடர்புகளுக்கு
TCC UK: 02033719313
                07540302109.                                                   பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு .
« PREV
NEXT »

No comments