Latest News

December 25, 2015

விஷால் மீது பாயாத வன்கொடுமை சட்டம் சிம்பு மீது பாய்வதேன்? கேட்கிறார் வீரலட்சுமி
by admin - 0

நடிகர் சிம்பு தமிழர் என்பதால் வன்கொடுமை தடுப்புச்சட்டம் வெறித்தனமாக பாய்கிறது என்று தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார். சிம்பு, அனிருத் இணைந்து உருவாக்கியதாக கூறப்படும் 'பீப்' பாடலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து கண்டங்கள் எழுந்து வருகிறது. இது, கோவை, சென்னை, ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளன. நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 


தலைமறைவான சிம்புவை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிம்புவிற்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிம்புவிற்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி. இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் விஷால் தாழ்த்தப்பட்ட மக்களை கொச்சை படுத்தி பேசிய போது பாயாத வன்கொடுமை தடுப்புச்சட்டம் , தமிழ் சினிமா துறையில் தனக்கென்று ஒரு நற்பெயரை தமிழர் அடையாளத்தோடு வைத்திருக்கும் அண்ணன் டி.ஆர்.ராஜேந்திரன் மகனுக்கு மட்டும் ஏன் வன்கொடுமை தடுப்புச்சட்டம் வெறித்த னமாக பாய்கிறது. அவர் தமிழன் என்பதாலா? ஒரு வேளை தமிழக காவல் துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தால் அவர் ஜாமீனில் வெளியே வரும் பொழுது தமிழர் முன்னேற்றபடை சார்பாக எமது தலைமையில் அவருக்கு சிறை வாசலிலேயே வரவேற்பு கொடுப்பேன். 


இன்று பெண்ணியத்திற்காக குரல் கொடுக்கும் மாதர் குல மாணிக்கங்களே பெண்கள் என்ற வரையரை இந்தியாவில் இருக்கும் பெண்களை மட்டும் தான் குறிக்குமா? ஈழத்தில் இல்லையா? ஒரு வினாடியாவது கற்பை இழந்த பல்லாயிரம் பெண்களின் கதையை கேளுங்கள். கற்பை காக்க உயிர் தியாகம் செய்த பல்லாயிரம் பெண்களின் கதைகளை படியுங்கள். பெண்களின் கண்ணி யத்தை பாடல் வரிகள் மட்டும் பாதுகாக்க முடியாது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


« PREV
NEXT »

No comments