சிங்கள இராணுவத்தில் இருந்து தப்பி வந்த தமிழ் இளைஞர்களை தேடும் போர்வையில், வடக்கில் தேடுதல்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2009ம் ஆண்டுக்கு பின்னர் பல தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர்.
எனினும் அவர்கள் குறைந்த வேதனத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள வயல்களில் தொழில்புரிய வைக்கப்பட்டனர்.
இதனை அடுத்து பல இளைஞர்கள் தப்பி வெளியேறி இருந்தனர்.
அவர்களை தேடுவதாக கூறிக் கொண்டு வடமாகாணம் எங்கும் இராணுவத்தின் சுற்றித் திரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
No comments
Post a Comment