இலங்கைக்கு நிதியுதவி வழங்கவுள்ளதாக பிரித்தானியா உறுதியளித்துள்ள நிலையில், அதுகுறித்து பிரித்தானிய நாடாளுமன்றின் அனைத்துக் கட்சிக்குழு விளக்கம் கோரியுள்ளது.
குறித்த நிதியானது இலங்கையின் இராணுவ மீளமைப்புக்கு பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது எவ்வாறு பயன்படுத்தப்படுமென விளக்குமாறு பிரித்தானிய பிரதி வெளியுறவு அமைச்சர் ஹூகோ ஸ்வைரிடம் கோரப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவம் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த விசாரணை இன்னும் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவில்லையென தெரிவித்துள்ள அனைத்துக் கட்சிக் குழு, இவ்வாறான நிலையில் நிதியுதவி வழங்குவது குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
அண்மையில் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மைத்திரி கலந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரனை சந்தித்தார். இதன்போது இலங்கைக்கு 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதாக டேவிட் கமரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment