கிடப்பிலுள்ள பெருந்தொகையான வழக்குகளை துரிதப்படுத்தும் வகையில் அடுத்த வருடம் முதல் மோட்டார் போக்குவரத்து தண்டனைச் சட்டத்துடன் தொடர்புள்ள தவறுகளுக்கு வழக்கு தொடராமல் நேரடியாக தண்டப்பணம் அறவிடும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது. விசாரிக்கப்படாமல் இருக்கும் வழக்குகளில் மோட்டார் போக்குவரத்துடன் தொடர்புள்ள வழக்குகளே அதிகம் எனவும் குறிப்பிட்ட அமைச்சு, இணக்க சபையில் ஆராயப்படும் வழக்குகளின் பெறுமதியை 05 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 05 வருட காலத்தில் இணக்க சபைக்கு வந்த வழக்குகளில் 51 வீதமானவை விசாரித்து முடிவு காணப்பட்டன.அதன் மொத்த தொகை 03 இலட்சத்து 75 ஆயிரமாகும். வழக்குகளை விசாரித்து முடிப்பதற்கு இணக்க சபைகள் பெரும் பங்களித்து வருகின்றன. இந்த வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டிருந்தால் வழக்கு விசாரணைகள் தாமதமடைவது இன்னும் அதிகரித்திருக்கும்.
சிவில் மற்றும் குற்றவியல் வழக்கு சட்டக் கோவைகளை தற்காலத்திற்கு உகந்தவாறு மாற்ற வேண்டும். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ தெரிவித்துள்ளார் .
No comments
Post a Comment