Latest News

December 27, 2015

முகநூல் பாவனை தடை?
by admin - 0

சமூக வலைத்தளமான பேஸ்புக் கணக்­கொன்றை ஆரம்­பிப்­ப­தற்கு உரிய வய­தெல்­லை­யொன்றை நிர்­ண­யிப்­பது தொடர்பில் அர­சாங்கம் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளதாகத் தெரி­ய­வ­ரு­கி­றது.

பேஸ்புக் வலை­த்தளத்தினூ­டாக பாட­சாலை மாண­வர்கள் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­படும் சம்­ப­வங்கள் அண்­மைக்­கா­லத்தில் அதி­க­ரித்­துள்­ள­தாக தர­வுகள் பதி­வா­கி­யு­ள்­ளன. குறித்த துஷ்­பி­ர­யோ­கங்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே வய­தெல்லை கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது.

இது தொடர்­பி­லான பேச்­சு­வார்த்தை சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருடன் நடை­பெற்றுக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் தெரிய வரு­கி­றது. இதே­வேளை ஐரோப்­பிய நாடு­களில் பேஸ்புக் கணக்­கொன்றை ஆரம்­பிப்­ப­தற்கு 13 ஆக இருந்த வய­தெல்லை 16 ஆக உயர்த்­தப்­பட்­ட­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

இலங்­கையில் பேஸ்புக் வலை­ய­மைப்பின் மூலம் சிறு­வர்கள் அதி­க­ளவில் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாகக் குறிப்­பிட்டு பேஸ்புக் வலை­ய­மைப்பை தடை­செய்­வ­தற்­கான பேச்­சு­வார்­த­தை­களும் கடந்த காலங்­களில் இடம்­பெற்­றது.

எனினும் தற்­போது பாட­சாலை மாண­வர்­களின் பேஸ்புக் பயன்­பாட்டை குறைத்து சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களைத் தவிர்ப்­ப­தற்கு வய­தெல்­லை­யொன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. சட்­டத்­துறை , வலைத்தள தொழிநுட்பப்பிரிவு மற்றும் துறைசார்ந்தோர்களுக்கிடையில் வயதெல்லை வரையறை பற்றிய சட்ட ஏற்பாடுகள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
« PREV
NEXT »

No comments