மெய்நிகர் தமிழீழ அரசாங்க செயல்முனைபொன்றின் ஊடாக தமிழீழத் தனியரசுக்கான அரசியல் அமைப்பினை வரைவதற்கான முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளது.
மலரும் 2016ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டில் சுதந்திர வேட்கையின் குறியீடாக சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான அரசியல் அமைப்பு வரைவாக
இது அமையும் என தெரிவிக்கபடுகின்றது.
உலகத் தமிழ் மக்களையும் இணைத்த வண்ணம் இது வரையப்படும் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், முழுமையான அரசியல் விடுதலை பெறுவதற்கு முன்னர் தமது நாட்டுக்கான அரசியல் அமைப்பை மக்கள்; எழுதிய உதாரணங்கள் உலக வரலாற்றில் உண்டு என்பதையும் இவ்விடயத்தில் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்செயல்முனைப்பு குறித்தான முழுமையான விபரம் 2016 புத்தாண்டில் நா. தமிழீழ அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படவிருக்கின்றது.
இதேவேளை சிங்கள தேசம் வரும் 2016ம் ஆண்டில் தனது அரசாங்கத்திற்கு புதிய அரசியல் யாப்பினை வரைவதற்கு எத்தனித்து வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த முனைப்பு ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் விருப்பினை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது இருக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
No comments
Post a Comment