இலங்கையின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி தபால் அட்டைப் பரப்புரையொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடங்கப்பட்டுள்ளது.
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த உண்ணாநிலைப் போராட்டம், டிசெம்பர் 15ம் திகதி வரையிலான காலக்கெடுவுடன் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
கைதிகளின் விடுதலைக்கான நம்பிக்கைதரும் நடத்தைகள் சிறிலங்கா அரச தரப்பில் இல்லாத நிலையில், இவ்விவகாரத்தினை அனைத்துலக சமூகம் நோக்கி கொண்டு செல்லும் பொருட்டு இத்தபால் அட்டைப் பரப்புரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் டிசம்பர் 15ம் திகதி முதல் தொடங்கியுள்ளது.
இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபைத் தீர்மானத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியற் கைதிகளின விடுதலை வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அவர்களுக்கும், ஐ.நா தீர்மானத்தினை முன்வைத்திருத்த கூட்டுநாடுகளை நோக்கியும் இத்தபால் அட்டைப் பரப்புரை முன்னெடுக்கப்படுகின்றது.
No comments
Post a Comment