யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த மகீசன் ஞானசேகரன் அமெரிக்க ஜனாதிபதியை நேரில் சந்திக்கிறார்
அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள யாழ் மண்ணைச் சேர்ந்த மகீஷன் ஞானசேகரன்.
யாழ்-அளவெட்டி, அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது அமெரிக்காவின் நியூ ஜேர்சியில் (New Jersey) வசிக்கும் திரு, திருமதி நிர்மலா ஞானசேகரன் செல்லையா தம்பதியினரின் புதல்வன் செல்வன் மகீஷன் ஞானசேகரன் அவர்கள் நியூ ஜெர்சிக்கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட 2015 ம் ஆண்டின் அனைத்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையிலான கல்வித்திறன், சமூகப்பணி ஈடுபாடு, மற்றும் மாணவ தலைமைத்துவம் உட்பட்ட பல்வேறுபட்ட தெரிவுப் போட்டிகளிலும் முதல் இடம் பெற்று அமெரிக்க ஜனாதிபதி Barack Obama வினால் கெளரவிக்கப்படும் நிகழ்வில் பங்கேற்பதற்கென 2016 பங்குனி 5ம் திகதி அமெரிக்கத் தலைநகரில் (Washington D.C .) அமைந்துள்ள வெள்ளை மாளிகைக்கு (White House) அழைக்கப்பட்டுள்ளார்.
உயர்கல்விப் பெறுபேறு மற்றும் மாணவ தலைமைத்துவத் திறன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு அமெரிக்க ஜனாதிபதியினால் கெளரவிக்கப்படவுள்ள முதல் தமிழ் மகன் என்ற பெருமை மகீஷன் ஞானசேகரன் ஊடாக யாழ் மண்ணுக்கு சென்றடைவது பெருமைக்குரிய ஒரு விடயமாகும்.
அமெரிக்க தலைநகரில் தங்கியிருக்கும் ஒரு வார காலப்பகுதிகளில் மகீஷன் ஞானசேகரன் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதி, Senators, House of Representatives உட்பட பல்வேறு உயர்மட்ட அரசியல் வல்லுனர்களைச் சந்தித்து மாணவ தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களின் உயர்கல்வி சம்மந்தப்பட்ட விடயங்கள் பற்றிக் கலந்துரையாடவுள்ளார்.
இத்தெரிவின் மூலம் செல்வன் மகிஷன் ஞானசேகரன் அவர்கள் அமெரிக்க டாலர் $ 5000 பல்கலைக் கழக புலமைப்பரிசிலுக்கும் உரித்துடையவர் ஆகின்றார். அண்மையில் நியூ ஜெர்சியில் நடந்த பல்கலைக்கழகத் தெரிவுப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மகிஷன் உலகின் முன்னிலைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான Princeton University யில் நான்கு வருட பட்டப்படிப்பை தொடர ஆயத்தமாகி வருகின்றார்.
மகிஷன் போன்ற திறமையுள்ள தமிழ் மாணவர்கள் புலம் பெயர் நாடுகளில் மென்மேலும் உருவாகி எமது தாய் நாட்டுக்கும் தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துத் தர வேண்டுமென்று ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்
No comments
Post a Comment