Latest News

December 30, 2015

சீன செய்திச் சேவையில் நிருபராக பணியாற்றும் ரோபோ!
by Unknown - 0

சீன செய்தி சேவையான ஷாங்காய் ட்ராகன் தொலைக்காட்சி செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவை வானிலை நிருபராக நியமித்துள்ளது.

காலை நேர செய்திப் பதிப்பின்போது திடீரென்று சேனலில் தோன்றிய ரோபோ, “குளிர்கால பருவத்தில் என் புதிய வேலை தொடங்குவதில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டது.

சீன செய்தி சேவையில் பணியாற்றும் ரோபோவுக்கு ‘ஜியோஐஎஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கிளவுட் மற்றும் பிக் டேட்டா உதவியோடு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ரோபோவை தயாரித்துள்ளது.

சீன செய்தி நிறுவனத்தில் பணியில் உள்ள ரோபோவின் குரல் அனைவரையும் கவர்ந்துள்ளது. அதன் வார்த்தை உச்சரிப்பு மற்றும் செய்தியை வெளியிடும் விதம் பார்ப்பவரை கவர வைத்துள்ளது.

ரோபோவை பணியில் அமர்த்தியிருக்கும் ஷாங்காய் ட்ராகன் தொலைக்காட்சி நிறுவனம், முழுவதுமாக செய்தியாளர்களை பணி நீக்கம் செய்து ரோபோக்களை வேலையில் அமர்த்தும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இதனால் வேலை பறிபோகும் என்ற பயத்தில் இருந்த செய்தியாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளதாக மற்றொரு சீன செய்தி பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments