விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டுக் கழக பொறுப்பாளராக செயற்பட்ட கவிஞர் புதுவை இரத்தினதுரை காணாமல் போகச் செய்யப்பட்ட பின்னரும் உயிருடன் இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுமுள்ளதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியம் வழங்கியபோது அவரது சகோதரி மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார். கவிஞர் புதுவை இரத்தினதுரை 2009 இறுதிப்போரின் போது 2009மே 18 அன்று தனது குடும்பத்துடன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார்.
இதன்போது இரண்டு மகன்களுடனும் மனைவியோடும் அவர் சரணடைந்துள்ளதாகவும் அவரது சகோதரி தெரிவித்தார். இதேவேளை அவரது இரண்டு மகன்களும் மனைவியும் விசாரணைகளைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட நிலையில் புதுவை இரத்தினதுரை இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டார்.
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர் மீட்டுத்தரப்பட வேண்டும் என்றும் அவர் உயிருடன் இருப்பதை திவயின உள்ளிட்ட சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையையும் அவரது சகோதரி ஆதாரப்படுத்திக் குறிப்பிட்டிருந்தார்.
No comments
Post a Comment