வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் தமிழரசுக் கட்சி தனித்து தம்மிடம் விளக்கம் கோரமுடியாது என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தம்மிடம் விளக்கம் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிகாரம் உள்ளது.
அதற்கான விளக்கத்தையும் தம்மால் வழங்க முடியும்.
எனினும் தமிழரசுக் கட்சிக்கு தம்மிடம் விளக்கம் கோர முடியாது என்று சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே சித்தார்த்தனிடம் விளக்கம் கோரப்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டிருந்தமையை சுட்டிக்காட்டியுள்ள சித்தார்த்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுக்கூட்டத்தில் இந்த விடயம் எழுப்பப்பட்டு விளக்கம் கோரப்பட்டால், அதற்கு பதில் வழங்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment