Latest News

December 21, 2015

மண்டைதீவுச் சந்தியில் வாகனசோதனையில் பொலிசார்-தகவல் வழங்குமாறு சுவரொட்டிமூலம் கோரிக்கை
by admin - 0

யாழ் தீவகம் மண்டதீவுச் சந்தியிலுள்ள  பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து தீவகம் பிரதான வீதியால் பயணிக்கும் முச்சக்கர வண்டி-வடி மற்றும் டாெல்பின் ரக வாகனங்கள் பாெலி்சாரால் மறிக்கப்பட்டு சோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே வீதியால்  தென்பகுதியிலிருந்து தீவகம் நோக்கிவரும் வாகனங்கள் ஒன்றும் மறிக்கப்படுவதில்லை யென வாகன ஓட்டுனர்கள் தெர்விக்கின்றனர்
பொலிசாரின் சோதனைகளையும் மீறி களவாக மாட்டு இறைச்சி யாழ் நகருக்குள் கடத்தப்படுவதாககவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரினால் ஒட்டப்பட்டுள்ள  சுவராெட்டிகள்
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோதச் செயல்ப்பாடு ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தமக்கு அறியத்தருமாறு யாழ்.மாவட்ட பொலிஸ் தலைமையகம் சுவரொட்டி மூலம் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

அத்தோடு, குறித்த விடயங்கள் தொடர்பில் 076-6633750 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் கலாச்சாரம், ரவுடிகளின் அச்சுறுத்தல்கள், பெண்கள் மீதான வன்கொடுமைகள் என்பன பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இச்சுவராெட்டிகள் தீவகம் உட்படயாழ்மாவட்டம்   முழுவதிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments