போர்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி லண்டனில் தற்போது கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது
சிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டமொனறினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு செய்திருந்தது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளை போர்க்கைதிகளாக அங்கீகரித்து, அவர்களது பாதுகாப்பினையும் விடுதலையினை உறுதிப்படுத்துமாறு அனைத்துலக சமூகத்தினை கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இது தொடர்பில் அனைத்துலக மட்டத்தில் தபால் அட்டைப் பரப்புரையொன்றினையும் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் 10 DOWNING STREET, WESTMINISTER,LONDON, SW1A 2AAமுன் இன்று ( 20-12_2015 )ஞாயிறன்று கவனயீர்ப்பு போரட்டமொன்று ஒருங்கு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.
காலை 11 மணி முதல் ஆரம்பமாகி மாலை 7 மணி வரை இக்கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறும் இதில் பெருமளவிலான தமிழ்மக்கள் பங்கேற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment