Latest News

December 29, 2015

கடந்த 24 மணி நேரத்தில் யாழில் அதிகமான மழை வீழ்ச்சி!
by admin - 0

கடந்த 24 மணித்தியாலங்களில் யாழில் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் காலை 8 .30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் அதிக மழை வீழ்ச்சியாக 103.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் கோவில் காடு பகுதியில் அண்மையில் வீசிய பலத்த காற்றினால் 12 வீடுகள் சேதமடைந்தன.

இவ்வாறு வீசிய பலத்த காற்றினால் சேதமடைந்த வீடுகளில் வசித்த மக்கள் தற்போது உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட  மக்களுக்கு தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கடலோரங்களில் இடி, மின்னலுடன் அதிக மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும், அனைத்து மீனவர்கள் மற்றும் கடல் சார்ந்த தொழிலாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

இதேவேளை, மட்டு.மாவட்டத்திலும் பாரிய கடல் கொந்தளிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இம் மாவட்டத்தில் சுமார் 28 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
« PREV
NEXT »

No comments