Latest News

December 26, 2015

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் புலனாய்வுப் பிரிவு
by admin - 0

அரச புலனாய்வுப் பிரிவு எதிர்காலம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்து விபரமான அறிக்கை ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது.
விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்,Mahindha,www.tgte-icc.orgவிவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்,Mahindha,www.tgte-icc.org
ஒரு அரசியல் அணியின் தலைமைத்துவம் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைப்பதற்காக பாரிய திட்டங்களை ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை அடிப்படையாக கொண்டு பல்வேபறு செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக புத்திஜீவிகளை கொண்டு கிராம மட்டங்களின் கூட்டங்களை நடத்தவும் அந்த அணியினர் திட்டமிட்டுள்ளதாகவும் அரச புலனாய்வுப் பிரிவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டப்படி வேலை செய்தல் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்து நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பை நடத்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஸ்தம்பிக்க செய்வது தொடர்பாக குறித்த அரசியல் அணியினர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி அமைச்சர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.

அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்க மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு ஜனாதிபதி, அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அமைச்சுக்களில் காணப்படும் குறைப்பாடுகள், பிரச்சினைகள் குறித்து உரிய கவனத்தை செலுத்துமாறும், அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை சீர்குலைக்க செயற்படுத்த உள்ள திட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் ஜனாதிபதி, அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியே, அரசாங்கதின் எதிர்கால நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனவரி மாதம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.

சீனாவின் உதவியுடன் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »

No comments