டெல்லி விமான நிலையம் அருகே துவாரகா பகுதியில், எல்லை பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சூப்பர்கிங் ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 10 பேர் உயிரிழந்தனர்.
தனியாருக்கு சொந்தமானதாக கூறப்படும் இந்த விமானம் விபத்திற்குள்ளானதில் 3 இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், 7 தொழில்நுட்ப வல்லுநர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து டெல்லி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவிக்கையில்,
இன்று காலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ராஞ்சிக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தெரிவித்துள்ளார்.
மேலும், விமானத்தை விமான நிலையத்துக்கே திருப்பிச் செலுத்துவதாகவும் அவசரமாக தரையிறங்க ஓடுதளத்தை தயார்படுத்துமாறும் கோரியுள்ளார். அதற்கான ஆயத்தப் பணிகள் செய்த நிலையில் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த விமானம், விமான நிலையத்துக்கு அருகிலேயே வீழ்ந்து நொறுங்கியது. சம்பவ இடத்துக்கு 15 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்ட போதிலும், விமானத்திலிருந்த 10 பேரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது

No comments
Post a Comment