Latest News

December 18, 2015

பொல்லுக் கொடுத்து அடிவாங்கும் இந்திய அரசு..!! ஈழத்து துரோணர்...!!
by admin - 0

பொல்லுக் கொடுத்து அடிவாங்கும் இந்திய அரசு..!! 

ஈழத்து துரோணர்...!!!

பிழையான கனிப்பீட்டின் ஊடே, ஒருவருக்கு வலியச் சென்று உதவி செய்த பின், அவரிடம் இருந்து எதிர்வினைத் துன்பத்தை, மீளப்பெறும் போது "பொல்லுக்கொடுத்து அடிவாங்கினர்" என்னும் பேச்சு வழக்கு தமிழரின் வாயில் அடிக்கடி உச்சரிக்கப்படும். இது யாருக்கு பொருந்துதோ, இல்லையோ நிச்சயமாக இந்திய அரசுக்கு பொருந்தும்.!

1980 களில் இலங்கை அரசு மேலைத்தேய நாடுகளுடன் (குறிப்பாக அமெரிக்கா) உறவை பேணியமையால் இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களால், அப்போது தமிழர் சார்பு போராட்டங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட இந்திராகாந்தி தலைமையிலான அரசுக்கு சரியாக வழிகாட்டப் பட்டிருந்தது. 

அவரது மரணத்தின் பின் பதிவிக்கு வந்த ராஜீவ் காந்தி, பிழையான கொள்கைவகுப்பாளர்களால் வழிநடத்தப் பட்டு, அவரது தாயாரால் உருவாக்கப் பட்டிருந்த, தமிழருடனான உறவில் விரிசலை உண்டாக்கினார். சிங்கள அரசு என்றைக்கும் இந்திய அரசுக்கு சார்பாக நடந்ததில்லை.  

அதற்கு உதாரணம் இந்திய- சீன யுத்தம், இந்திய- பாக்கிஸ்த்தான் யுத்தத்தின் போது,சீன, பாக்கிஸ்தான் அரசுகளுக்கே, சிங்கள அரசு  தனது ஆதரவை வழங்கியிருந்தது. அந்த நேரங்களில் தமிழர் தரப்பு இந்திய அரசுக்கே தமது ஆதரவை வழங்கி இருந்தனர். 

ராஜீவின் வருகையின் பின்னும், அவரது மரணத்தை தொடர்ந்தும், காங்கிரஸ் அரசு, சிங்கள அரசை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரமுடியும் என்னும்  "தேன்நிலவுக் கனவில்" மிதந்து கொண்டிருந்தது/இன்றும் இருக்கிறது. அதனால் வலியச் சென்று ஆயுதம், உளவு, பணம், ஆளணி என உதவிப் பட்டியலை நீட்டி இருந்தது. 

இவை அனைத்தயும் "வாயெல்லாம் பல்லாக" சிங்கள அரசு பெற்றுக் கொண்டு, தமிழருக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் சிங்கள ஆசை தாங்களே கையாள்வதாக " வடிவேல் சொல்வது போல சிறுபிள்ளைத் தனமாக" நம்பிக்கொண்டு இருந்தது இந்திய அரசு. 

ஆனால் போர் முடிவின் பின் இந்திய அரசுக்கு, கையை மட்டும் முத்தமிட அனுமதித்த மகிந்த அரசு, சீனாவுக்கு முகத்தை காட்டி இருந்தது. அப்போதும் கூட "விழுந்தவன் மீசையில்,மண் ஒட்டாதது போல" அசட்டுப் புன்னகையுடன் மீண்டும் சர்வதேசத்துடன் இணைந்து மைத்திரியை கொண்டு வருவதற்கு "ஒரு அணிலாக சேவை செய்து" ஆட்சி மாற்றம் கொண்டு வந்தபின் மீண்டும் தேன்நிலவுக் கனவுடன் இருந்தது.

கனவு கலைந்து, இப்போது விழித்தாகிவிட்டது. அனால், "காத்திருந்தவன் பெண்ணை, வந்தவன் கொண்டு போன கதையாக " தென்னிலங்கையின் ஒரு பகுதி சீன அரசிடமும் (அம்பாந்தோட்டை, கொழும்பு ) இனொரு முக்கிய பகுதியான, திருகோணமலையும், காங்கேசன்துறைத்  துறைமுகமும் அமெரிக்க அரசிடம் கைமாறுகின்றது. 

பன்னெடும் காலமாக திருகோணமலைத் துறைமுகம் மீதான ஆளுமை யாரிடம் உள்ளதோ, அவர்களின் இராணுவ வலிமை ஆசியாவில் பிரதானமானது. அமெரிக்க அரசு தனது என்னத்தை கச்சிதமாக நிறைவேற்றி இராஜதந்திர வெற்றியை பெற்று விட்டது. 

உலகின் நான்காவது வல்லரசாக கருதும் இந்திய அரசால் தனது மாநிலங்களில் உள்ள நிலப்பரப்பை விட சிறிய நிலப்பரப்பை கொண்ட,மிக அருகில் உள்ள நாட்டைக் கூட கையாளத்தெரியாத வெளியுறவுக் கொள்கைவகுப்பாளர்கள்  "பானிப்பூரி சுடக்கூட" லாயக்கு இல்லாதவர்கள். 

பாகிஸ்தான், சீனா, பங்களதேஷ்,நேப்பாள், இலங்கை என எல்லைகளாகக் கொண்ட யாருமே இப்போது இந்திய அரசுக்கு நண்பர்களாக இல்லை. எவ்வளவு மோசமான ஒரு வெளியிரவுக் கொள்கையை இவர்கள் கையாண்டுள்ளார்கள் என்பது இவர்களுக்கே வெளிச்சம். இவர்களுக்கு நண்பர்களாக இருந்தவர்களின் முதுகில் குத்தியதற்கான பலனை இன்று அனுபவிக்கிறார்கள். 

இந்தியாவின் இணைப்பில் உள்ள மாநிலங்கள் என்பது "புதுத்துணி ஒன்றில் தைக்கப்பட்ட பழைய துணிகளின் இணைப்பே ஆகும்". இப்படியே போனால் பழைய துணிகள் கிழிந்து தனியே போவதை இந்த கொள்கை வகுப்பாளர்களால் தடுக்க முடியாது. 

இதில் சிங்கள அரசு இந்திய அரசுக்கு சொல்லும் செய்தி "இந்த ஆட்டத்தில் நீங்கள் இல்லை என்பதே"....  எப்போதும் தமிழரே இந்திய அரசுக்கு பலம்..!!
புன்னகையுடன் துரோணர்...!!!
« PREV
NEXT »

No comments