Latest News

December 21, 2015

மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
by Unknown - 0

பூமியை போன்றே, மனிதர்கள் வாழ ஏற்ற சூழலில் ‘உல்ப் 1061′ ( Wolf 1061) எனும் புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியிலிருந்து 14 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாவது: மனிதர்கள் வசிப்பதற்குத் தகுதியான கிரகங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டதில், பூமியை ஒத்த சூழல் கொண்ட 3 கிரகங்களை கண்டறிப்பட்டன.

ஒரு சிறு நட்சத்திரத்தை இம்மூன்று கிரகங்களும் சுற்றி வருகின்றன நட்சத்திரத்திற்கு ‘உல்ப் 1061′ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது புவியிலிருந்து 14 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

இம்மூன்று கிரகங்களின் நிலப்பரப்பும் பாறை போல கடினமாக இருக்கக்கூடும் எனத் தெரிகிறது. குறிப்பாக நடுவில் உள்ள கிரகத்தின் தன்மை, பூமியைப் போலவே உள்ளது. அந்த கிரகத்திற்கு ‘உல்ப் 1061சி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பூமியைவிட 4 மடங்கு பெரியதாக இருக்கும். இங்கு திரவ வடிவில் நீர் இருக்கவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ள கிரகங்கள் இதற்கு முன்பு கண்டறியப்பட்டாலும், அவை ‘உல்ப் 1061′ நட்சத்திரத்தைவிட இரு மடங்கு தொலைவில் உள்ளன.
« PREV
NEXT »

No comments