Latest News

December 26, 2015

224 பேர் பலியான ரஷ்ய விமானத்தில் வெடிகுண்டு வைத்தது விளாடிமிர் புடினா? அதிர வைக்கும் தகவல்கள்
by Unknown - 0

ரஷ்ய விமானம் வெடித்து சிதறி 224 பேர் பலியான சம்பவத்திற்கு முன்னதாக அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்க ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடின் தான் உத்தரவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

ரஷ்ய விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது?

ரஷ்ய நாட்டிற்கு சொந்தமான Metrojet Flight 9268 என்ற விமானம் 217 பயணிகள் மற்றும் 7 விமான குழுவினருடன் கடந்த அக்டோபர் மாதம் 31ம் திகதி எகிப்தில் உள்ள Sharm el-Sheikh விமான நிலையத்தில் இருந்து அதிகாலை நேரத்தில் ரஷ்யாவில் உள்ள St Petersburg நகருக்கு புறப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட 23 நிமிடங்களில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 224 பேரும் உடல் சிதறி பலியாகினர்.

ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஐ.எஸ் தீவிரவாதிகள் தான் என்றும், வானிலை மாற்றங்களால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. எனினும், இதனை உறுதி செய்ய முடியவில்லை.

இந்நிலையில், ரஷ்யாவின் KGB என்ற உளவு நிறுவனத்தில் பணிபுரிந்து முன்னால் உளவு அதிகாரியான போரிஸ் கர்பிச்கோவ் என்பவர் புதிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது, ரஷ்ய விமானத்தில் வெடிகுண்டு வைக்க ரகசிய சதி திட்டம் தீட்டியதே ரஷ்யாவின் ஜனாதிபதியான விளாடிமிர் புடின் தான் என அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

போரிஸ் கர்பிச்கோவ் கூறும் குற்றச்சாட்டுகள்

எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்ட விமானத்தின் கேப்டனான Valery Yurievich Nemov என்பவருக்கு சுமார் 12,000 மணி நேரங்கள் விமானத்தை இயக்கிய அனுபவம் இருக்கிறது.

அதேசமயம், கடந்த 2001ம் ஆண்டு அந்த விமானத்தின் ஒரு இறக்கையில் சேதாரம் ஏற்பட்டு சீர்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரை எந்த பழுதும் விமானத்தில் ஏற்படவில்லை.

இந்நிலையில், விமானம் புறப்பட்டு 23 நிமிடங்களுக்கு பிறகு விமானத்தின் புன்புற பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டு விமானம் இரண்டாக பிளந்துள்ளது.

அசுர வேகத்தில் பூமியை நோக்கி வந்த இந்த விமானத்தில் இருந்த பயணிகளில் சிலர் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் நடுவானிலேயே இறந்துள்ளனர். எஞ்சிய பயணிகள் விமானம் பூமி மீது மோதியதில் பலியாகியுள்ளனர்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது, விமானத்தின் பின் இருக்கையில் தான் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது, 30A என்ற இருக்கையில் அமர்ந்திருந்த ரஷ்ய நாட்டை சேர்ந்த Nadezhda Bashakova(77) என்ற பெண்ணிடம் தான் வெடிகுண்டு இருந்துள்ளது.

விமானம் புறப்படுவதற்கு முன்னதாக அந்த 77 வயதான பெண்ணை ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு உளவு அதிகாரி சந்தித்துள்ளார்.

அப்போது, ‘ரஷ்யாவில் உள்ள தனது உறவினரிடம் இதை கொடுத்துவிடுங்கள்’ என கூறி அந்த பெண்ணிடம் ஒரு சிறிய பெட்டியை கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தனது அதிகாரத்தை பயன்படுத்தி விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்படாமலேயே அந்த பெண்ணை விமானத்தில் ஏற்றியுள்ளார்.

பெண்ணிடம் இருந்த வெடிகுண்டு கம்பிகளானது சிறிது நேரத்திற்கு பிறகு தானாக உருகி அதுவே வெடிக்கும் வகையை சேர்ந்ததால், விமானம் புறப்பட்ட 23 நிமிடங்களில் வெடி விபத்து ஏற்பட்டது என போரிஸ் கூறியுள்ளார்.

விபத்தின் பின்னணியில் விளாடிமிர் புடினின் சதித்திட்டமா?

ரஷ்ய விமானத்தில் வெடி குண்டு வைக்க ரகசிய உத்தரவிட்டது அந்நாட்டு ஜனாதிபதியான விளாடிமிர் புடின் தான் என போரிஸ் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து விரிவாக கூறும்போது, ‘முதலாவதாக, உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரிமியாவை தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டதை தொடர்ந்து ரஷ்யாவிற்கு உலகளவில் கண்டனம் எழுந்தது.

பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்தது. இவற்றில் இருந்து மீள சர்வதேச அளவில் ரஷ்யா மீது அனுதாபம் எழுவதற்காக தன்னுடைய விமானத்தையே அவர் வெடிக்க சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

இரண்டாவதாக, சிரியா ஜனாதிபதியான ஆசாத்திற்கு ஆதரவாக ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது போர் தொடுக்க ஒரு உறுதியான காரணம் விளாடிமிர் புடினிற்கு தேவைப்பட்டது.

ரஷ்ய விமானத்தை வீழ்த்தியது ஐ.எஸ் தீவிரவாதிகள் தான் என உலக தலைவர்களை நம்ப வைத்தால், ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது எளிதில் போர் தொடுக்கலாம் என்பது விளாடிமிர் புடினின் இரண்டாவது திட்டமாகும்.

மூன்றாவதாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடப்பதன் மூலம் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ரஷ்யாவின் பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய ஒரு வழி பிறக்கும் என விளாடிமிர் புடின் திட்டமிட்டதால் தான் ரஷ்ய விமானம் அவரது திட்டத்திற்கு பலியாகியுள்ளது என கூறியுள்ளார்.

மேலும், கடந்த 1999ம் ஆண்டு விளாடிமிர் புடின் முதன் முதலாக ஜனாதிபதியாக பதிவி ஏற்ற பிறகு, மோஸ்கோ நகரில் உள்ள 4 குடியிருப்பு கட்டங்களில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது.

இதில், அப்பாவி குடிமக்கள் 307 பேர் உயிரிழந்ததுடன், 1,700 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு விளாடிமிர் புடினின் சதித்திட்டம் தான் காரணம் என பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டது.

ரஷ்யாவில் உள்ள Chechnya நகரில் ஊடுருவி இருந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என விளாடிமிர் புடின் மறுப்பு தெரிவித்தார்.

இந்த தாக்குதலை விசாரிக்க தனி கமிஷன் அமைக்கப்பட்டபோது, அதில் பங்கு பெற்ற 2 முக்கிய அதிகாரிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்த உண்மையை வெளியே கூறிய ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரி ஒருவரும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதை போரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யாவை விட்டு வெளியேறி தற்போது பிரித்தானியாவில் வசித்து வரும் போரிஸ் கர்பிச்கோவ், ரஷ்ய விமானம் வீழ்த்தப்பட்டது உள்ளிட்ட இந்த ரகசிய தகவல்கள் அனைத்தையும் தற்போதையை ரஷ்யாவின் உளவு நிறுவன அதிகாரிகள் மூலமாக சேகரித்துள்ளதாகவும் அவர் தெளிப்படுத்தியுள்ளார்.

போரிஸின் இந்த குற்றச்சாட்டுகள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யா அரசு அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments