கிழக்கு பசுபிக் பெருங்கடலில் ஏற்படும் எல் நினோ என அழைக்கப்படும் இயற்கை அனர்த்தங்கள் காரணமான வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் எதிர்வரும் ஆண்டில் மில்லியன்கணக்கானோர் பட்டினியாலும் நோய்களாலும் துன்பப்படும் அபாயமுள்ளதாக ஒக்ஸ்பாம் உள்ளடங்கலான தொண்டு முகவர் நிலையங்கள் எச்சரித்துள்ளன.
கிழக்குப் பசுபிக் பிராந்தியத்தில் இடம்பெறும் வெப்பநிலை ஏற்றத்தாழ்வுகளால் பிராந்தியங்களில் வெள்ள அனர்த்தங்கள் மற்றும் வறட்சி என்பன அதிகரிக்கும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல் நினோ என்பது ஸ்பெயின் நாட்டு மொழியில் பாலகன் என பொருள்படும். இது குழந்தை இயேசுவைக் குறிக்கும் வார்த்தையாகும்.
மேற்படி எல் நினோ இயற்கை அனர்த்த தோற்றப்பாடு நத்தார் காலங்களில் தென் அமெரிக்க கரையோரப் பிராந்தியங்களில் ஏற்படுவதால் அதற்கு மேற்படி பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த எல் நினோ விளைவால் ஆபிரிக்க நாடுகளில் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் உணவுப் பற்றாக்குறை உச்சக் கட்டத்தையடையும் என எதிர்வு கூறப்படு றது.
அதே சமயம் இந்த விளைவால் கரிபியன், மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பிராந்தியங்களும் எதிர்வரும் 6 மாதங்களுக்கு பெரும் பாதிப்பை எதிர் கொள்ளவுள்ளன.
உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற இந்த வெப்ப ஏற்றத் தாழ்வுகள் காரணமாக இந்த 2015 ஆம் ஆண்டு உலகின் மிகவும் வெப்பமான ஆண்டாக மாறியிருந்தது.
இதன் பிரகாரம் ஆபிரிக்காவிலுள்ள 31 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்.
மேற்படி பாதிப்பை எதிர்கொண்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் எதியோப்பியாவில் வசிப்பவர்களாவர். அந்நாட்டில் 10.2 மில்லியன் பேர் பாதிப்பை எதிர் கொண்டுள்ளனர்.
இந்த எல் நினோ விளைவால் அபிவிருத்தியடைந்த நாடுகள் நேரடி பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகள் உணவு விலைக ளின் அதிகரிப்பால் பாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment