Latest News

December 31, 2015

ஜெனிவா குற்றவாளிக் கூண்டிலிருந்து இலங்கையை மைத்திரியே காப்பாற்றினார்
by admin - 0

ஜெனீ­வாவில் வருடா வருடம் குற்­ற­வாளிக் கூண்டில் நின்று பதி­ல­ளிக்கும் நிலை­மையை மாற்றி ஜன­வரி 8 ஆம் திகதி அமைதிப் புரட்­சியை ஏற்­ப­டுத்தி இன்று சர்­வ­தே­சத்தின் ஆத­ரவைப் பெறும் நாடாக இலங்­கையை மாற்­றிய பெருமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கே சேரும் என முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.
யுத்­தத்தை வென்றும் சமா­தானம் ஏற்­ப­டாது மத வன்­முறை தலை­தூக்­கி­யி­ருந்த நாடு இன்­றைய நல்­லாட்­சியில் அமைதிப் பூங்­கா­வாக மாறி­யுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­றிய போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்­தது. ஆனால் எம்­மி­ட­மி­ருந்து மத ஒற்­றுமை கை நழுவிப் போனது. கடந்த 2010, 2011, 2012 ஆம் ஆண்­டு­களில் தொடர்ச்­சி­யாக நாட்டில் தினமும் எங்­கே­யா­வது ஓரி­டத்தில் மதங்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் பதி­வாகிக் கொண்­டே­யி­ருந்­தன. சர்­வ­தே­சத்தின் மத்­தியில் இலங்கை ஓரங்­கட்­டப்­பட்ட நாடா­கி­யது. ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் எமக்கு எதி­ராக பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டன.

இவ்­வா­றான சூழ்­நி­லை­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான தேசிய அர­சாங்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்டு நல்­லாட்சி உரு­வா­னது.

இன்று நாட்டில் உண்­மை­யான சமா­தானம் ஏற்­பட்­டுள்­ள­தோடு ஐ.நா. குற்­ற­வாளிக் கூண்டில் ஏற வேண்­டிய நிலையும் இல்­லாமல் போனது. சர்­வ­தேசம் எமக்கு ஆத­ரவு வழங்­கு­கி­றது. வெளி­நாட்டு நிபு­ணர்கள் நாட்­டுக்கு வந்து செல்­கின்­றனர்.

அத்­தோடு தகவல் அறியும் சட்­ட­மூலம் விரைவில் பாரா­ளு­மன்­றத்தில்
முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள் ளது. இதன்மூலம் ஊழல் மோசடிகளை முற்றாக ஒழிக்கலாம். நிறைவேற்று அதிகார மும் ஒழிக்கப்படவுள்ளது. ஜனநாயகம் நிலைநிறுத்தப்படும் என்றார்.
« PREV
NEXT »

No comments