புலம் பெயர் தமிழர்களின் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாகவே தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என விராஜ் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
சிங்கள முற்போக்கு இடதுசாரிய செயற்பாட்டாளரும், தமிழர் போராட்டத்திற்கான நீண்ட கால ஆதரவாளருமான விராஜ் மெண்டிஸ் இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சமாதானப் பேச்சுவார்த்தை என்ற செயற்பாட்டின் ஊடாக உள்ளே நுழைந்த மேற்கத்தேய நாடுகள் ஒருபோதும் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
அது போலவே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும் ஒருபோதும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளைப்பெற்றுத் தரப்போவதும் இல்லை எனுவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இவர்களை நம்பி ஏமாந்து விடாமல் தமிழ் மக்கள் தங்களின் உண்மையான நண்பர்களை இனம் காண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, புலம் பெயர் தமிழ் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வருவதன் ஊடாக மாத்திரமே தமிழர்கள் எதிர்பார்க்கும் நியாயமான தீர்வு மற்றும் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்றும் விராஜ் மெண்டிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment