Latest News

December 24, 2015

நல்லாட்சியிலும்? புலனாய்வாளர்களின் தொல்லை தீர்ந்தபாடில்லை: மக்கள் விசனம்
by admin - 0

நல்லாட்சியில் தமிழ் மக்கள் அச்சமற்ற வகையில் சுதந்திரமாக வாழலாம் என்று கூறப்பட்டாலும் அவ்வாறான நிலை வட பகுதியில் காணப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் அரச படை தரப்பினரின் பிரசன்னம் அதிகரித்தே காணப்படுகிறது.

முன்னைய அரசின் ஆட்சிக்காலத்தில் புலனாய்வாளர்களின் செயற்பாடு காரணமாக எவ்வகையான அச்ச உணர்வு மக்கள் மத்தியில் காணப்பட்டதோ அதே நிலைப்பாடே இன்றும் இங்கு தொடர்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக காணாமல்போனோர், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மக்கள்; போராட்டம் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் அரச படை தரப்பினரின் புலனாய்வாளர்கள் கலந்து கொள்வதுடன் நிகழ்வில் பங்குபற்றுபவர்களை புகைப்படம் எடுப்பது போன்ற அச்சுறுத்தும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே காணப்படுகிறது.

இவ் புலனாய்வாளர்களின் செயற்பாட்டால் கடந்த ஆட்சியில் இருந்து வந்த அச்ச உணர்வில் இருந்து மக்கள் விடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டாலும் அது கைகூடவில்லை என சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments