கனடாவில் இருந்து நாடுகடத்துவதற்கு முயச்சிக்கப்படும் இலங்கையர் ஒருவர், ஒன்டேரியோ முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் விருந்துபசார நிகழ்வொன்றுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
த நெசனல் போஸ்ட் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
எம்.கே.ஈழவேந்தன் என்ற அவர், விடுதலைப் புலிகளுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தார் என்ற அடிப்படையில் கனடாவில் இருந்து நாடுகடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
எனினும் இதனை அறியாமலேயே அவரை குறித்த நிகழ்வில் பங்குபெற செய்திருந்ததாக, அந்த கட்சியின் தலைவர் ஜெக் மெக்லேர்ன் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment