Latest News

December 30, 2015

அதிரடி கைதுகள் விரைவில் இலங்கை அரசாங்கம் அறிவிப்பு
by admin - 0

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் சட்­ட­வி­ரோத செயற்­பா­டுகள், மற்றும் ஊழலில் ஈடு­பட்ட ராஜ­பக் ஷ குடும்பம் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ருக்கு எதி­ரான விசா­ர­ணைகள் நிறைவ­டைந்­துள்­ளன. எனவே குற்றம் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளோரை விரைவில் கைது செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அந்த வகையில் கைதுகள் படலம் விரைவில் ஆரம்­பிக்கும். குற்றம் செய்­த­வர்கள் சிறை செல்லும் காலம் வந்­து­வி­ட்டது என்று அமைச்­ ச­ரவைப் பேச்­சா­ளரும்,அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ண தெரி­வித்தார்.

இவ்­வாறு மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள கைது­களை தடுக் கும் நோக்கில் அர­சாங்­கத்­திற்குள் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக கடந்த ராஜ­பக் ஷ ஆட்­சியின் ஆவி­களும் நிழல்களும் முயற்­சித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. அவ்­வாறு நல்­லாட்­சிக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்­ற­வர்கள் தொடர்பில் நல்­லாட்­சிக்கு அப்பால் சென்று பாடம் புகட்­டு­வ­தற்கு அர­சாங்கம் தயா­ராக உள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

நல்­லாட்­சியைக் குழப்­பு­வ­தற்கு எவ­ருக்கும் இட­ம­ளிக்­க­மாட்டோம். எமது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் வரை நல்­லாட்சி தொடரும். நல்­லாட்­சியை
குழப்­பு­வோ­ருக்கு எடுக்க நட­வ­டிக்­கைகள் எம்­மிடம் உள்­ளன என்றும் ராஜி­த­சே­னா­ரட்ண சுட்­டிக்­காட்­டினார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அமைச்சர் மேலும் குறிப்­பி­டு­கையில் எதிர்­வரும் ஜன­வ­ரி­மாதம் 8ஆம் திக­தி­யுடன் நாட்டில் மாற்­றத்­திற்­கான புரட்சி ஏற்­பட்டு ஒரு­வ­ருடம் முடிந்து விட்­டது. இந்த ஒரு வரு­ட­கா­லத்தில் நாம் பல்வே சாத­னை­களை நிகழ்த்­தி­யுள்ளோம். விசே­ட­மாக 1978 ஆம் ஆண்­டி­லி­ருந்து முயற்­சிக்­கப்­பட்ட நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் குறைக்கும் 19 ஆவது திருத்த சட்­டத்தை நாம் நிறை­வேற்­றினோம்.

இதில் இரண்டு முக்­கிய அதி­கா­ரங்கள் ஒழிக்­கப்­பட்­டன. ஜனா­தி­ப­திக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்ய முடி­யாது என்ற அதி­கா­ரமும் அவர் பாரா­ளு­மன்­றத்­திற்கு பொறுப்­புக்­கூ­ற­வேண்டும் என்ற அதி­கா­ரமும் ஒழிக்­கப்­பட்­டன. இதன் மூலம் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்­திற்கு பொறுப்­புக்­கூறும் வகையில் மாறி­யுள்ளார். ஜனா­தி­ப­திக்கு எதி­ராக யாரும் நீதி­மன்றம் செல்லும் உரிமை உள்­ளது.
அது­மட்­டு­மன்றி விரைவில் முழு­மை­யான நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை ஒழிப்­ப­தற்கு ஜனா­தி­பதி திட­சங்­கற்பம் பூண்­டுள்ளார். அதன் மூலம் பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­றப்­பட்டு புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும். அத­னூ­டாக ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­பட்டு பிர­தமர் முறைமை உரு­வாக்­கப்­படும்.

இதனை நாங்கள் செய்தே தீருவோம். பிர­தமர் ஆட்சி முறை­மையை நிறு­வி­விட்டே 2020 ஆம் ஆண்டு தேர்­த­லுக்கு நாங்கள் செல்வோம். அடுத்­த­தாக 18 ஆவது திருத்த சட்­டத்தை நீக்­கிய எமது அர­சாங்கம் 19 ஆவது திருத்த சட்­டத்தின் ஊடாக அர­சி­ய­ல­மைப்புப் பேர­வையும் நிறுவி சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­க­ளையும் நிறு­வி­யது.

தற்­போது சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் சிறப்­பாக செயற்­ப­டு­கின்­றன. அது­மட்­டு­மன்றி நாம் ஆட்­சிக்கு வந்த பின்னர் நல்­லாட்சி ஜன­நா­யகம், சுதந்­திரம், மனித உரிமை என்­ப­வற்றை நிலை­நாட்­டினோம். ஊட­க­வி­ய­லா­ளர்கள் தற்­போது எதற்கும் பயப்­ப­ட­வேண்­டி­ய­தில்லை. தற்­போது ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொலை செய்­யப்­ப­டு­வ­தில்லை.அவர்கள் நாட்டை விட்டு வெளி­யே­று­வ­தில்லை. அந்­த­ள­விற்கு ஊடக சுதந்­தி­ரத்தை நிறு­வி­யி­ருக்­கின்றோம். ஆனால் சில ஊட­க­வி­ய­லா­ளர்கள் அந்த சுதந்­தி­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்­கின்­றனர்.
குறிப்­பாக கடந்த ராஜ­பக்ஷ அர­சாங்­கத்தின் ஆவி­களும், நிழல்­களும் நல்­லி­ணக்­கத்தைக் குழப்­பு­வ­தற்கு பாரிய முயற்­சி­களை மேற்­கொள்­கின்­றன. கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் சட்­ட­வி­ரோத செயற்­பா­டுகள், மற்றும் ஊழலில் ஈடு­பட்ட ராஜ­பக்ஷ குடும்பம் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ருக்கு எதி­ரான விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்­துள்­ளன.
எனவே குற்றம் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளோரை விரைவில் கைது செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அந்த வகையில் கைதுகள் படலம் விரைவில் ஆரம்­பிக்கும் என்­பதை தெரி­விக்­கின்றோம். விசே­ட­மாக தாஜுதீன் கொலை விவ­காரம் தொடர்­பான விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்­துள்­ளன. அதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் யார் என்­பது தற்­போது நன்­றாக தெரிந்­து­விட்­டது.
ஆகவே விரைவில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது­செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அத்­துடன் சுவிஸ் வங்­கியில் இலங்­கையில் இருந்து கறுப்புப் பணம் வைப்பு செய்­யப்­பட்­டுள்­ளமை தொடர்­பான தர­வு­களை எமக்குப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு அந்த வங்கி முன்­வந்­துள்­ளது. அத்­துடன் சிங்­கப்பூர், டுபாய் வங்­கி­களில் வைப்பு செய்­யப்­பட்­டுள்ள பணம் தொடர்­பா­கவும் தர­வுகள் வர ஆரம்­பித்­துள்ன. எனவே இவை அனைத்­தையும் கொண்டு விசா­ர­ணை­களை நடத்­த­வுள்­ள­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது செய்வோம்.
இவ்­வாறு மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள கைது­களை தடுக்கும் நோக்கில் அர­சாங்­கத்­திற்குள் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக கடந்த ராஜ­பக்ஷ ஆட்­சியில் ஆவி­களும் நிழ்­களும் முயற்­சித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. அவ்­வாறு நல்­லாட்­சிக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்­ற­வர்கள் தொடர்பில் நல்­லாட்­சிக்கு அப்பால் சென்று பாடம் புகட்­டு­வ­தற்கு அர­சாங்கம் தயா­ரக உள்­ளது.
எமது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் வரை நல்­லாட்சி தொடரும். நல்­லாட்­சியை குழப்­பு­வோ­ருக்கு எடுக்க நட­வ­டிக்­கைகள் எம்­மிடம் உள்­ளன. நல்­லாட்­சியை குழப்­பு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. நல்­லாட்­சியை குழப்­பு­கின்­ற­வர்­க­ளுக்கு நல்­லாட்சி என்ன என்­பதை காட்­டு­வ­தற்கு நாம் தயா­ராக உள்ளோம். நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கட்சித் தலை­வர்கள் கூடி கலந்­து­ரை­யா­டினர்.
இதன் போது ஊழல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கும் இன­வா­தி­களை தோற்­க­டிக்­கப்­ப­தற்கும் திட­சங்­கற்பம் பூணப்­பட்­டது. நல்­லாட்­சிக்கு எதி­ரான சக்­திகள் எவ்­வாறு செயற்­பாட்­டாலும் நாம் தோற்­க­டிப்போம். தற்­போது சிலர் நல்­லாட்­சிக்கு எதி­ராக செயற்­பட்டு வரு­கின்­றனர். ஆனால் எமது நல்­லாட்சிப் பயணம் தொடர்ந்து பய­ணிக்கும். அதனை தடுத்து நிறுத்த எவ­ராலும் முடி­யாது.
கேள்வி:- ஊழ­லுக்கு எதி­ரான கைது நட­வ­டிக்­கைகள் இடம் பெற­வில்­லையே
பதில்:- இந்த செயற்­பாட்டில் காணப்­ப­டு­கின்ற தாமதம் குறித்து மக்கள் அக்­கறை செலுத்­தி­யுள்­ளனர். இதில் சட்­டமா அதிபர் திணைக்­களம், மற்றும் பொலிஸ் திணைக்கள் என்­பன சம்­பந்­தப்­பட்­டுள்­ளன. சில இடங்­களில் மந்­த­க­தியை காண்­கிறோம். வழக்கு விசா­ர­ணைகள் இடம் பெற்று முடிந்­துள்­ளன. தற்­போது நட­வ­டிக்கை எடுப்­ப­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது செய்­ய­வேண்­டி­யுள்­ளது. ஆனால் இவ்­வாறு கைதுகள் தொடர்பில் அச்சம் கொண்­டுள்ள கடந்த ஆட்­சி­கா­லத்தில் முக்­கி­யஸ்­தர்கள் அர­சாங்­கத்தை குழப்­பு­வ­தற்கும் வீண் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டுத்­தவும் முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் கைது சம்­பந்­த­மான விவ­கா­ரங்கள் தொடர்பில் புல­னாய்வு அறிக்­கைகள் கிடைக்கப் பெற்­றுள்­ளன. குற்­றச்­சாட்­டுக்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்டோம் மேற்­கொண்­டுள்ள இறுதி முயற்­சி­யையும் நாங்கள் தோற்­க­டிப்போம்.

கேள்வி:- எவன்காட் விவகாரம் தொடர்பில் ?

பதில்:- அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விடயத்தில் ஒரு தாமதம் இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.

கேள்வி:- எவன்காட் நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையை தொடர்ந்து புறக்கணிக்கிறாரே?

கேள்வி:- யாருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்று கூற முடியுமா?

பதில்:- பலர் உள்ளனர். ராஜபக்ஷ குடும்பம் உள்ளிட்ட பலருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். பலர் சிறைகளுக்குள் செல்வதற்கான காலம் வந்துவிட்டது. தவறு செய்தோர் தப்பிக்கவே முடியாது.
« PREV
NEXT »

No comments