Latest News

December 17, 2015

2.0'வில் அர்னால்ட் விலகல் ஏன்? - லைக்கா நிறுவனம் விளக்கம்
by admin - 0

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0'வில் அர்னால்ட் விலகலுக்கான காரணம் குறித்து லைக்கா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பட்டது. அக்‌ஷய்குமார் முக்கிய வேடத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ஏமி ஜாக்சனும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

இப்படத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கவிருக்கும் வேடத்தில் நடிக்க முதலில் அர்னால்ட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை இறுதியில் தோல்வியில் முடிந்தது.

அர்னால்ட் விலகல் குறித்து லைக்கா நிறுவனத்தின் படைப்பாற்றல் குழு தலைவர் ராஜூ மகாலிங்கம், "ஒப்பந்த முரண்பாடுகள்... இந்திய சினிமாவுக்கும் ஹாலிவுட்டுக்கும்மான இடைவெளியை நிரப்புவதில் இருக்கும் உண்மையான சவால் இது. உங்களின் ஆதரவுக்கு நன்றி திரு.பாட்ரிக் ஸ்வார்ஷ்நெகர்" என்று தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
« PREV
NEXT »

No comments