Latest News

December 09, 2015

பூமியின் சுற்று பாதையில் மாற்றம் வரும்! 2016 க்கு பிறகு நேரம் சரி இல்லை! கண் தெரியாத பல்கேரிய நாஸ்டர்டாம் கணிப்பு
by Unknown - 0

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும், அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது.

14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் இவரை போலவே தன்னை நவீன நாஸ்டர்டாம்சாக கருதி கொள்ளும் பாஸ்டர் ரிக்கார்டோ சல்சா வயிற்றில் புளியை கரைக்கும் பல தகவல்களை கூறி இருந்தார். அவர் அடுத்த ஆண்டும் ஜூன் மாதம் 3 வது உலகபோர் தொடங்கும் என கூறி இருந்தார்.

தற்போது பல்கேரிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கூறி உள்ள பல கணிப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாதவர் இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவர் அங்கு பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கபடுகிறார்.இவர் 50 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கு மேற்பட்டவை பலித்தும் உள்ளன நடந்தும் உள்ளன.

2016 ஆம் ஆண்டு ஐரோப்பா மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் படை எடுப்பார்கள். இவர் ஏற்கனவே சிரியாவுக்கு வெளியே 201 ஆம ஆண்டிற்கு பிறகு பெரும் இஸ்லாமிய போர் தொடங்கும் என கணித்து கூறி இருந்தார்.

வாங்கா கூறி உள்ள கணிப்புகளில் சில

* 1989 ஆம் ஆண்டு : ”திகில், திகில்! அமெரிக்க சகோதரர்களே இரும்பு பறவை ஒன்று தாக்கியதால் விழும் ,ஓநாய்கள் குரல் எழுப்பும், அப்பாவி மக்களின் ரத்தம் சிதறும்” என கூறி உள்ளார்.

அதுபோல் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி இஸ்லாமிய தீவிரவாதிகளால் விமானம் கடத்தபட்டு நியூயார்க்கின் வர்த்தக மைய கட்டிடத்தில் மோத செய்யபட்டது இதில் ஆயிரகணக்கான பேர் பலியானார்கள்.

* பசிபிக் பிராந்தியத்தில் 2004 ஆம் ஆண்டு ஏற்படும் நில நடுக்கம் மற்றும் சுனாமியால் நுற்றுகணக்கானபேர் உயிர் இழப்பார்கள் என கூறி உள்ளார்.

* 2016 ஆண்டு மிகபெரிய இஸ்லாமிய போர் தெடங்கும் ஐரோப்பியர்களுக்கு எதிராக இரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவர்.அவர்கள் 2043 ஆம் ஆண்டு ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார்கள். எனவும் கூறி உள்ளார்

* 2018 ஆம் ஆண்டு சீனா உலகின் சக்திவாய்ந்த நாடாக மாறும் என கூறி உள்ளார். அவர் கூறியபடி சமீப வருடங்களாக பொருளாதாரத்திலும் ராணுவத்திலும் சீனா வல்லமை பெற்று வருகிறது.

* பூமியின் சுற்று பாதையில் மாற்றம் வரும் என கூறி உள்ளார் அது 2023 க்கு முன் நடைபெறும் என எதிர்பார்க்கப்டுகிறது.

* 2025: ஐரோப்பியாவின் மக்கள் தொகை 0 வாக அமையும்

* 2028 மனிதன் சுக்கிரன் கிரகத்திற்கு பறப்பான் அங்கு புதிய எரிசக்தி ஆதாரங்களை கண்டறிவார்கள்.

* 2033 உலகில் துருவ பனிப் படலங்கள் உருகி நீரின் அளவு அதிகரிக்கும்

* 2043 ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய அரசாக மாறும் ரோம் அவர்களின் தலைநகராகும்.

* 2072 மற்றும் 2086க்கு இடையில் ஒரு வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயம் புதிய தன்மையை உருவாக்கும்

*2170 முதல் 2256 ஆம் ஆண்டுக்கு இடையில் பூமியில் இருந்து சுதந்திரமாக பிரிந்து அணுசக்தியால் செவ்வாய் கிரகத்தில் காலனி அமைக்கப்படும், உலகில் கடலுக்கு அடியில் நகர்ங்கள் உருவாகும் வேற்று கிரகவாசிகளின் கண்டு பிடிப்புகள் அதிபயங்கரமான கண்டு பிடிப்பு நடக்கும்

* 2262 ஆம் ஆண்டு மற்றும் 2304 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நமது கால பயணத்தில் விரிசல் ஏற்படும். பிரஞ்சு கொரில்லாக்கள் பிரான்சில் முஸ்லீம் அதிகாரிகளுடன் போரிடுவார்கள்.

 * 2341 இல் இயற்கை மற்றும் மனிதனால் தொடர் பேரழிவுகள் ஏற்படும் பின்னர் நமது பூமி வசிக்க தகுதி அற்றதாக மாறி விடும். மனிதர்கள் நமது சூரியகுடும்பத்தின் மற்ற கிரகங்களை தேடி ஓடுவர்.

 * 4302 முதல் 4674 தீய கோட்பாடுகள்& நடக்கும் மனிதர்களுக்கு இறப்பே கிடையாது,வேற்றுகிரகவாசிகள் உள்வாங்கபடுவர். 34 ஆயிரம் கோடி மக்கள் கடவுளிடம் பேச சிதறி ஓடுவார்கள்

* 5070 ஆம் ஆண்டு பிரபஞ்சம் முடிவடையும்.
« PREV
NEXT »

No comments