வெள்ளை வேன் மூலம் தமது செயலாளர்கள் மூவரை கடத்திச் சென்ற சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வு பிரிவிற்கு செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய 'வெள்ளை வேன் கும்பலை' முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே நடத்திச் சென்றுள்ளார்.
2011 டிசம்பர் பாதியில் இருந்து 2012 ஏப்ரல் மாதம் வரையான காலத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளராக செயற்பட்ட அமல் ரொட்ரிகோ, திலக் என்ற ஹட்டபுட்ட திலக், டொனல்ட் பெரேரா ஆகியோர் வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டனர்.
இந்த கடத்தல் குறித்து வாக்குமூலம் பெறும் நடவடிக்கை நவம்பர் 19 ம் திகதி ஆரம்பமானது.
அன்று வாக்குமூலம் அளித்த டொனல்ட் பெரேரா, 2012.01.07 திகதி வெள்ளை வேனில் வந்த கும்பல் தன்னை கடத்திச் சென்றதாக கூறியுள்ளார்.
அப்போது பாதுகாப்பு சேவையில் இருந்த உபுல் ஜயவர்த்தன என்பவரை தான் இனங்கண்டு கொண்டதாகவும் அவர் தற்போது பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) உதவி பொலிஸ் அதிகாரியாக (ASP) செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2012 ஜனவரி 7ம் திகதி கடத்தப்பட்ட டொனல்ட் பெரேரா, இரகசிய இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டு 2012.01.11 திகதி அன்று விடுதலை செய்யப்பட்டார்.
No comments
Post a Comment