வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் மழையால் பாதிக்கப்பட்ட பெருமளவிலான மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புவதில் தாமதம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
மழை மேலும் தொடரும் என்பதால் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும், தமிழகத்தின் கடலூர் மாவட்டத்திலும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை திங்களன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று இரண்டு பழைய வீடுகள் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரு தம்பதியினரும், வேலூர் மாவட்டம் மேல்விஷாரம் பாலாற்றில் இரண்டு இளைஞர்களும் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
மீண்டும் மழை தொடர்ந்தாலும் மீட்புப்பணிகள் தடைப்படாது என்றும், தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் உடனுக்கு உடன் திட்டமிடப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு தவிர, தமிழகத்தின் முக்கிய எதிர்கட்சிகளும், தண்ணார்வ தொண்டு நிறுவனங்களும் பொது மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே சென்னை புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் போதுமான நிவாரணப் பணிகள் நடக்கவில்லை என்று மக்கள் குறை கூறுகின்றனர்.
No comments
Post a Comment