இலங்கையின் பெரும்பாலான ராணுவ முகாம்களில் நிலக்கீழ் சிறைக்கூண்டுகள் பராமரிக்கப்படுவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழு விஜயம் செய்திருந்தது.
சுமார் பத்து நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொண்ட குறித்த ஆணைக்குழு நேற்றுடன் இலங்கையில் தமது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக தமது கண்காணிப்பிற்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா. ஆணைக்குழு, இலங்கையின் பல்வேறு ராணுவ முகாம்களில் நிலக்கீழ் சிறைக் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன் நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில் இவ்வாறான விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் , ராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகள் காட்டுமிராண்டித்தனமானவை என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இலங்கை ராணுவத்தினருக்கு இது ஒரு எதிர்பாரா பின்னடைவாகவே கருதப்படுகின்றது.
No comments
Post a Comment