இலங்கைப் போர்க்குற்றச் செயல்கள தொடர்பிலான நீதிப் பொறிமுறைமையை கண்காணிக்கும் நோக்கில் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் நிபுணர் குழு ஒன்றை பெயரிட்டுள்ளார்.
பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் சட்டம், மனித உரிமை விவகாரங்கள், போர்க்குற்றவியல் சட்டங்கள், மனிதாபின சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்ற விற்பன்னர்கள் ஐந்து பேர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்க உள்ளனர்.
பிரான்ஸைச் சேர்ந்த மேரி குய்ராட், பிரிட்டனைச் சேர்ந்த மஹாராணி சட்டத்தரணி பீற்றர் ஹெய்ன்ஸ், பிரிட்டனின் மஹாராணி சட்டத்தரணி ரிச்சர்ட் ரொஜர்ஸ், அமெரிக்காவின் ஹீத்தர் ரயன் மற்றும் இந்திய நீதவான் அஜித் பிரகாஸ் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணை தொடர்பிலான நீதிப் பொறிமுறைமை எவ்வாறு அமைந்துள்ளது என்பது குறித்து கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இணை அனுசரணையாளரான இலங்கை பரிந்துரைகளை நிறைவேற்றுவதாக உறதியளித்துள்ள நிலையில், இவ்வாறு இந்தப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவுள்ளன என்பது குறித்து கண்காணிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment