உலகப்பரப்பெங்கும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்த தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளின் ஒர் அங்கமாக அமெரிக்காவின் நியு யோர்க்கில் வணக்க நிகழ்வு சிறப்புடன் இடம்பெற்றுந்ததோடு, லண்டனில் மாவீரர் வார இத்ததான முன்னெடுப்பு இடம்பெற்றுள்ளது.
நியு யோர்கில் இடம்பெற்றிருந்த மாவீரர் நாள் நிழ்வில் அமெரிக்க தேசியக் கொடியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினரும் பிரபல ஓவியக்கலைஞருமாகிய சான் சுந்தரம் அவர்கள் ஏற்றியிருந்தார்.
தமிழீழத் தேசியக் கொடியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஏற்றியிருந்தார்.
மிகஎளிiiயான முறையில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த தோழர் தியாகு அவர்கள் உரையாற்றியிருந்தார். பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் நாள் சிறப்புரையினை வழங்கியிருந்தார்.
இதேவேளை மாவீரர் வாரத்தினை கடைப்பிடிக்கும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த செயல்முனைப்புக்களின் ஓர் அங்கமாக லண்டனில் இரத்தக்கொடுகை இடம்பெற்றுள்ளது.
தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் களமாடி வீரமரணம் அடைந்த மாவீரர்களை நினைவேந்தி உணர்வாளர்கள் பலர் இந்த இரத்தக்கொடுகையில் பங்கெடுத்திருந்தனர்.
No comments
Post a Comment