Latest News

November 05, 2015

சூரியனின் மின்காந்த அலைத்தாக்குதலால் ஸ்தம்பிக்கும் பூமி: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Unknown - 0

சூரியனில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைத் தாக்குதலால் பூமியின் தொலைத்தொடர்புகள் முற்றிலுமாக ஸ்தம்பிக்கும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதனை எதிர்கொள்வது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.

2020 அல்லது 2022ம் ஆண்டுகளில் இந்தத் தாக்குதல் நடக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு இதே போன்ற ஆபத்து ஒன்று பூமியை அச்சுறுத்தியது. ஆனால், அப்போது அதிர்ஷ்டவசமாக பூமி அதிலிருந்து தப்பியது.

ஆனால், இம்முறை இந்த ஆபத்திலிருந்து பூமி தப்புவது கடினம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்த மின்காந்த அலைத் தாக்குதல் நடக்க 12 சதவீதம் மட்டுமே வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டாலும், தாக்குதல் நடந்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என அமெரிக்கா இப்போதே ஆராயத் தொடங்கிவிட்டது.

ஏற்கனவே 1959 ஆம் ஆண்டு இதேபோன்ற தாக்குதல் சம்பவம் ஒன்றை பூமி சந்தித்தது. அப்போது தொலைத்தொடர்புகள், மின்சார வசதி ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டன. மின்சார நிலையங்கள், டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவை தீப்பற்றி எரிந்து நாசமாயின.

அமெரிக்கா, மொரக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் இந்த தாக்குதலில் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. ஆனால், அப்போது இருந்ததைக் காட்டிலும் தற்போது தொழில்நுட்பம் மேலும் முன்னேறிவிட்டது. இதனால் தற்போது பாதிப்பு மேலும் பல மடங்கு இருக்கும் என அஞ்சப்படுகிறது.

குறிப்பாக மற்ற நாடுகளை விட அமெரிக்கா இந்தத் தாக்குதலால் பெரும் அழிவைச் சந்திக்கும் எனக் கூறப்படுகிறது.

இத்தகைய மின்காந்த அலைத்தாக்குதல்கள் வழக்கமாக நோர்வேக்கு மேலே வடக்கு திசையில் ஒளி வெள்ளமாக நடைபெறுவது வழக்கம் தான். இதனை அரோரா மோரியாலிஸிஸ் என்கிறார்கள். அதாவது வடதிசை வெளிச்சம் என இதற்குப் பொருள்.

இந்த மின்காந்த அலைத் தாக்குதல் நடந்தால் உலகம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கும். அதுவும் சில நாட்கள் அல்ல, பல மாதங்கள். செல்போன் முதற்கொண்டு நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் எதையும் பயன்படுத்த முடியாது போகும்.
« PREV
NEXT »

No comments