தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்தான் தமிழீழ விடுதலைப் புலிகள்.
கடந்த 18.10.2015 அன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அகால மரணமான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தமிழினி ( சிவகாமி ஜெயக்குமார் ) அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஆழ்ந்த துயரத்தில் வீழ்த்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில், 1991ம் ஆண்டு தன்னையும் ஒரு விடுதலைப் போராளியாக இணைத்துக்கொண்ட தமிழினி அவர்கள் சக போராளிகளுக்கு ஒரு சகோதரியாக, நல்ல தோழியாக, தமிழ்ப் பெண்களின் பெண்ணிய விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து குரல்கொடுத்த அந்த விடுதலைப் பறவையின் உயிர் எம்மை விட்டுப்பிரிந்தது, எம்மில் ஒரு நிரப்ப முடியாத வெற்றிடமாகி விட்டது.
2009ம் ஆண்டு யுத்தத்தின் முடிவில் மக்களோடு மக்களாக முகாமிற்குள் சென்ற தமிழினியும் ஸ்ரீலங்கா இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டதை யாவரும் அறிவர், தடுப்பிலும் கூட தனது புற்றுநோயைப் பற்றி சிந்திக்காது பல கொடுமைகளை அனுபவித்து கொண்டகொள்கை, இலட்சியம் எனும் பாதையில் இருந்து விலகாது இறுதியில் விடுதலை பெற்றார்.
ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய தமிழினியின் கைதானது ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த சனநாயக விரோதச் செயலாகும், இன்று தமிழினியின் மரணம் என்பது ஒட்டுமொத்த தமிழினத்தையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவமாகத் திகழ்கின்றது, ஒட்டுமொத்த தமிழ்மக்களும் எவ்வளவுதூரம் விடுதலைப் புலிகளையும் எமது போராட்டத்தையும் நேசித்தார்கள் என்பதை தமிழினியின் மரணம் எடுத்துக்காட்டுகின்றது அதேவேளை தமிழ் மக்களும் புலிகளும் வேறல்ல.
எமது நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் சிங்களக் கூலிப்படைகள் எமது மக்களின் உள்ளுணர்வை எப்படித்தான் மிதித்து நசித்தாலும் தமிழ் மக்களின் விடுதலைத் தாகத்தில் இருந்து புலிகளையும் மக்களையும் பிரிக்கமுடியாது அதற்கு புலிகளின் கட்டமைப்புக்குள் வாழ்ந்த மக்கள் கலாச்சாரம், பண்பாடு, தமிழரின் பாரம்பரிய விழுமியங்களை கட்டிக்காத்து மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்களும், இன்று திட்டமிட்ட வகையில் கலாச்சாரச் சீர்கேடு, எமது பண்பாடு, எமது பாரம்பரிய விழுமியங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் சிதைக்கப்படுவதை தமிழ் மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப்போவதில்லை.
அதேவேளை தமிழ் மக்கள் மீண்டும் எழுச்சிகொள்ளும் நாள் வரும் அந்த நாள்வரை எமது மாவீரர்களும் போராளிகளும் சுமந்துசென்ற கனவை, அந்த இலட்சியத்தை எமது நெஞ்சங்களில் நாம் சுமந்துசென்று பயணிப்போமகா...
தமிழ் மக்கள் வேறு புலிகள் வேறு அல்ல,
நான் ஏன் புலியானேன்? என்ற கேள்விக்கு எமது மாவீரர்களும் போராளிகளும் சமர்ப்பணம், ஒரு இனம் தமது சொந்தநாட்டில் நீதி மறுக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வந்தபொழுது அவர்களின் சனநாயக உரிமையும் நசுக்கப்பட்டு வரும்பொழுது அந்த இனத்தின் கடமை தம்மை தாமே பாதுகாப்பது அந்த வகையில் தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு, ஊட்டி வளர்த்தெடுக்கப் பட்டவர்கள்தான் தமிழீழ விடுதலைப் புலிகள்.
- தயீசன்
No comments
Post a Comment