Latest News

November 11, 2015

நல்லாட்சி அரசாங்கத்தின் 2வது ஏமாற்று நாடகம்! பிணை வழங்கப்படவில்லை! - உண்ணாவிரதப் போராட்டம் குறித்து ஆஸி.நாடாளுமன்றில் உரை
by admin - 0

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்படவில்லை.
இன்று 32 பேர் பிணை வழங்கப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று நேற்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

எனினும் இன்று சுமார் 24பேரே அழைத்துச் செல்லப்பட்டனர் என சிறைச்சாலை தரப்புக்கள் தெரிவித்தன.

இந்தநிலையில், விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களத் தரப்பில் இருந்து எவரும் ஆஜராகாதபடியால், அரசியல் கைதிகளின் பிணை மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விடுவிக்கப்படவுள்ளவர்கள் தொடர்பான விடயங்களுக்காக தமக்கு பெயர் பட்டியல்கள் எவையும் வழங்கப்படவில்லை என்று சிஐடியினரும் மன்றில் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 24ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க பிணை மறுக்கப்பட்டநிலையில் நீதிமன்றத்துக்கு வெளியில் அழைத்து வரப்பட்ட அரசியல் கைதிகள் தமது போராட்டம் தொடரும் என்றும் தாம் மரணித்தால் உடல் உறுப்புக்களை தானம் செய்யுமாறு அவர்கள் கோரியதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து ஆஸி.நாடாளுமன்றில் உரை
மனித உரிமைகளின் அவுஸ்திரேலிய செனட்டரான ரெஹினொன் என்பவர் இலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

சர்வதேச சமூகம், ஏராளமான ஊடகவியலாளர்கள் மற்றும் பல நாடுகளின் அரசியல்வாதிகள் இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் கேள்வியெழுப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்து மறக்கவில்லை என்பது முக்கியமானதாகும்.

நாம் அவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறோம்.

தடுத்து வைக்கப்பட்டவர்களின் சுதந்திரம் இரண்டு மத்திய சமகால மனித உரிமைகளின் தரங்களுக்கு முக்கியமானதாகும்.

பயங்கரவாத தடைச் சட்டம் சுதந்திரத்தை மீறிய செயலாகும். சட்டங்கள் அடிப்படை குடியுரிமைகள் மீறி ஆதரிக்கின்றதோடு இலங்கையில் நியாயமான விசாரணை உரிமைகள் பொருந்தாத்தன்மையையே அளிக்கின்றது.

பயங்கரவாத தடைச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் அதை மறுக்கும் சந்தர்ப்பத்தில் விரிவான நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments