Latest News

November 10, 2015

மேற்கு லண்டனில் இடம்பெற்ற 13ஆவது கத்திக் குத்து: இளைஞன் பலி
by admin - 0

மேற்கு லண்டன் பகுதியில் வைத்து கத்திக்குத்துக்கு இலக்கான 18 வயது இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞன், நேற்று (திங்கட்கிழமை) சனநெருக்கடி மிகுந்த West Ruislip ரயில் நிலையத்தில் வைத்து கத்திக்குத்துக்கு இலக்காகி உள்ளார். ஆனால் உயிரிழந்த இளைஞன் இதுவரை அடையாளங் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மேற்கு லண்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றைய சம்பவமானது, குறித்த பகுதியில் இந்த வருடத்தில் இடம்பெற்ற 13ஆவது கத்திக் குத்துச் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments