திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழர்கள் 4 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்கில் தொடர்புடையதாகக் கூறி இலங்கைத் தமிழர்கள் 13 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். தங்களை விடுவிக்கக் கோரி கடந்த மாதம் 12 நாட்கள் இலங்கைத் தமிழர்கள் 11 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதத்தில் பங்கேற்காத சுரேஷ்குமார் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இது குறித்து நியூஸ் 7 தமிழில் செய்திகள் தொடர்ந்து வெளியாகின. இந்நிலையில், சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 4 பேரை விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மகேஸ்வரன், சிவனேஸ்வரன், சந்திரகுமார் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். போரில் குண்டு வீச்சினால், இடுப்புக்கு கீழ் செயலிழந்த சுரேஷ்குமாரை அழைத்துச் செல்ல உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சிறப்புமுகாமில் உள்ள மற்றவர்களையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கைத் தமிழர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments
Post a Comment