Latest News

November 05, 2015

கொக்கிளாயில் இராணுவம் சட்டவிரோத மீன்பிடியில்- வட மாகாண சபை என்ன செய்யும்?
by admin - 0

முல்லலைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் பகுதியில் இராணுவத்தினர் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பிரதேச மீனவர்கள் குளோபல் தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தனர்.



இராணுவத்தினர் மீன்பிடியில் ஈடுபடுவதே சட்ட விரோதமானது என்று விபரித்துள்ள பிரதேச மீனவர் அமைப்பு பிரதிநிதி ஒருவர் அந்த இராணுவத்தினர் சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாகவும் கூறினார்.



தடைசெய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை தமது பாரம்பிய கடலில் பயன்படுத்துவதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றும் இதனால் தமது தொழிலிடத்தின் பாரம்பரிய தன்மை அழிவடையும் என்றும் பிரதேச மீனவர்கள் கூறுகின்றனர்.



எற்கனவே தாம் மீன்பிடியில் காலம் காலமாக ஈடுபட்டு வந்த தமது பூர்வீக தொழிலடமான முகத்துவாரத்தில் பெரும்பான்மையின மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.



தமது பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாதுள்ளதாக குறிப்பிட்டுள்ள கொக்கிளாய் பிரதேச மீனவர்கள் தமது காணிகளை பெரும்பான்மையின மக்கள் அபகரித்து குடியேறியுள்ளதாகவும் அதனால் பெரும் இழப்புக்களுக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறுகின்றனர்.



இந்த நிலையில் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கணக்கில் இராணுவமும் சட்ட விரோத படககுகளையும் சட்ட விரோத வலைகளையும் பயன்படுத்தி தமது பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் கூறுகின்றனர்.





தொடர்ந்தும் தாம் நெருக்கடியும் போராட்டமும் மிக்க வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறும் கொக்கிளாய் பிரதேச மீனவர்கள் இதற்கு விரைவில் தீர்வொன்றை பெற்றுத் தருமாறும் கோருகின்றனர். 
« PREV
NEXT »

No comments