Latest News

November 03, 2015

எம்.கே.நாராயணன், தி இந்துவின் என்.ராமிற்கு எதிரான முற்றுகைப் போராட்டம். இந்திய-இலங்கை அரசின் சதித்திட்டத்தினை முறியடிக்க ஒன்று கூடுங்கள்
by admin - 0

’தி இந்து’விற்கு எதிரான தொடர் போராட்டத்தின் இரண்டாம் நாளாக நாளையும் போராட்டம் நடத்துகிறோம்.
tamil,விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்,Mahindha,www.tgte-icc.org

இலங்கை அரசின் துணையோடும், உதவியோடும் ’தி இந்து’ நவம்பர் 4ஆம் தேதி மாலை ஈழ அகதிகள் குறித்த கருத்துருவாக்க அரங்கினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழினப்படுகொலையின் இந்தியாவின் பங்கினை செய்த எம்.கே நாராயணனும், என்.ராமும் இக்கருத்தரங்கில் பங்கெடுக்கிறார்கள். 2009 யுத்தம் முடிவுற்றவுடன் ’ஈழத்தமிழர்களை’ சித்தரவதை முள்வேலி முகாமில் வைத்திருந்ததை கண்டு ‘மிகச்சிறந்த அனுபவத்தினை கண்டுணர்ந்தேன்’ என என்.ராம் தி இந்துவில் எழுதிய கட்டுரை தமிழின செயல்பாட்டாளர்களின் ரத்தத்தினை கொதிப்படைய வைத்தது. தினம் தினம் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட அந்த முகாமை சிலாகித்து கட்டுரை எழுதி தனது வக்கிரத்தினை காட்டியவர் தி இந்துவின் ஆசிரியர் என்.ராம்.

பாலச்சந்திரன் படுகொலைப் படத்தினை தனது இதழில் வெளியிட்டு, பாலச்சந்திரன் குறித்தான பொய்ச் செய்திகளையும், பாலச்சந்திரனும் குழந்தைப் போராளி போன்றே இருப்பவன் என்றும், பிற குழந்தைகள் உடுத்த உடையின்றி வரும் பொழுது பள்ளிக்கு ஏ.சி கார்களில் சென்றவன் என்றும் பொய்க்கட்டுரைகளை எழுதியது தி இந்து. இதன் மூளையாகச் செயல்படுபவர் என்.ராம்.

2009 இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை முன்னின்று செய்து முடித்தவர் எம்.கே நாராயணன். ராஜீவ் கொலைவழக்கில் சந்தேகத்திற்குறிய நபர் என்று வர்மா கமிட்டி , ஜெயின் கமிட்டி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர் இவர். தமிழின விரோத நிலைப்பாடு கொண்ட இந்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி, 2009இல் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளராக இருந்து இலங்கைக்கு முழு உதவியையும் செய்தவர்.

இந்த நபர்கள் ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கம் நடத்துகிறார்களாம். அதுவும் தமிழகத் தலைநகரின் மையத்தில் நிகழ்த்துகிறார்கள்.

சந்திரிகாவின் பின்னனியோடு தமிழீழ மக்களிடத்தில் நல்லிணக்கத்தினை குறிப்பாக அகதிகளோடும் ஏற்படுத்துகிறோம் என்கிற பிம்பத்தினை காட்டுவதற்கு இந்த கும்பல் முனைகிறது.

இனிமேலும் தமிழர்கள் ஏமாறப்போவதில்லை. வீணர்கள் கூட்டம் நம் இனத்தினை வேட்டையாட இனிமேலும் அனுமதிக்கப்போவதில்லை. ஒற்றை நபராக இருந்தாலும் எமது எதிர்ப்பினை பதிவு செய்வது தமிழரின் வரலாற்றுக்கடமை.

நமது எதிர்ப்பின்றி இந்தக் கும்பல் நம்மிடத்தில் செயலாற்றுவது நம்மை தலைகுனியச் செய்யும் செயல். நமது சுயமரியாதையை இழந்து இவர்களிடம் தோற்பதை நாங்கள் விரும்பவில்லை.

எதிர்ப்பு ஏதுமின்றி தமிழின விரோதிகள் வந்துசெல்வதை எந்த மானத்தமிழரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை சொல்ல நாளை மாலை ஒன்று கூடுகிறோம்.

இனப்படுகொலையில் இந்தியாவின் பங்களிப்பினை அம்பலப்படுத்தி, குற்றவாளிகளை மக்களிடத்தில் அடையாளப்படுத்த விரும்பும் தோழர்கள் இப்போராட்டத்தில் பங்கெடுக்கலாம்.

இந்தியாவை எதிர்க்கிறேன் என்பவர்கள், ஈழத்தினை நேசிக்கிறேன் என்பவர்கள், தமிழனை கொச்சைப்படுத்துபவனை வெல்வேன் என்று மார்தட்டுகிற அனைத்து தோழர்களும் கைகோர்ப்போம்.

எதிரிக்கு நம்முடைய பலமான எதிர்ப்பினை பதிவு செய்வோம். எதிரியை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் கொண்டவர்கள் எம்முடன் இணைக.

கட்சி, சாதி, மத எல்லை கடந்து ஒன்று கூடுவோம்.

இடம் : மியூசிக் அகடமி, மைலாப்பூர், ராதாகிருட்டினன் சாலை.
நேரம் : மாலை 5 மணி முதல்
தேதி : நவம்பர் 4, புதன் கிழமை.

ஆயிரமாய் ஒன்று கூடுவோம். நரிகளை விரட்டுவோம்
« PREV
NEXT »

No comments