Latest News

November 18, 2015

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க ஸ்ரீலங்கா அமைச்சரவை அங்கீகாரம்
by admin - 0

நிறைவேற்று ஜனாதிபதி முறை இரத்து, தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அமைச்சரவையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

ஜனாதிபதி வசம் காணப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தை நீக்கி அந்த அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்குதல், மற்றும் தேர்தல் முறை மாற்றம் குறித்து ஜனாதிபதி இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் யோசனை ஒன்றை முன்வைத்தார்.

குறித்த யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு, அது சட்டமூலமாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
\
« PREV
NEXT »

No comments