Latest News

November 30, 2015

மீண்டும் போர் தொடங்கட்டும் உன் இலச்சியத்தை நான் மீற்பேன் கப்டன் கவியரசி
by admin - 0

கப்டன் கவியரசி 
விடுதலைக்காக ஆயிரம்"அயிரம்
போராளிகளின் தியாகம் நிகழ்த்தி
எமது மண்ணை எதிரியிடமிருந்து மிட்டெடுப்பதற்காக தம் உயிர்களை ஆகுதியாக்கிக்கொண்டார்கள்.
அப்படி     கவியரசியின் வீரச்செயல்களும் நடந்தேறியிருக்கின்றது.

நடுத்தர குடும்பத்தில் 04.02.1987முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில்  தமிழச்சியாக வந்து பிறந்தாள் இந்துமதி.
தன்னுடைய பாடசாலை வாழ்க்கையை தொடர்ந்த இந்துமதி A/L மட்டும் படித்துக்கொண்டிரீந்தாள் 
இவள் சிறு வயதில் பயந்த சுபாகம்கொண்டவள்.

ஆனால் சக தோழியர்களுடன் சிரித்துக்கதைத்து மிகவும் சந்தோசமாக இருப்பாள் படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டிய  இந்துமதி  அதேபோன்று தன்னுடைய தாய் நாட்டிலும் ஆர்வம் கொண்டால் அந்த சிறுவயதிலே!!!!
தன்னுடைய தாய் நாட்டில் நடந்த படுகொலைகள்  தாங்கமுடியாத இந்துமதி தன்னுடைய தோழியர் இருவரையும் தன்னோடு அழைத்துக்கொண்டு எமது தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பில் 2006ம் ஆண்டு இணைந்தாள். 
சக போராளிகளிடம் அன்பாக பழகி அனைவரையும் கவர்ந்தாள்.

பயிற்சிகள் முடிவடைந்து.
கவியரசி எனும் பெயருடன் ஈழ விடுதலைக்காக போராட தயரானாள்.
ஆனால் இவளின் கல்வி திரமையைக்கண்ட எமது அமைப்பு இவளை அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு வளங்கப்பட்டிருந்தது.
எம்மினத்தை அடியோடு அழிக்க வேண்டும் என்பது இவளின் குறிக்கோள் இவள் தன் பொருப்பாளரிடம் சென்று தன்னை சண்டைக்கு அனுப்புங்கள் என்றால்.

அதற்கு அவர் சம்மதித்து அதே ஆண்டில் போர்க்களம் வந்தாள்
அங்கேதான் இவளை எனக்கு தெரியும் கண்டல் பகுதீ மிகவும் ஆபத்தான பிரதேசம்.பெரும் காடு முள் பற்றைகள் சூழ்ந்த பிரதேசம்.

சண்டை அனுபவம் இல்லாத தோழியரகள்.
எதிரியை முன்னேறி வரவிடாமல் தடுத்தாகவேண்டும்.
அப்போது கவியரசி என்னிம் கூறிய விடையம் இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை அக்கா ஆமி எவ்வளவு தூரத்தில் இருக்கின்றான் என்று என்னைக்கேட்டாள்.
அதற்கு எதியின் நிலைகளை காண்பித்தேன்.

நான் ஒரு  கேள்வி கேட்டேன். கவியரசி எதிரி"எங்களை பிடித்தாள் என்ன செய்வாய் என்று.

அதற்கு கூறியவிடையம்.
அவன் என்னைத்தொடும்போது நான் மாவீரர்களுடன் இருப்பேன் என்றால்.
அந்த களத்தில் சண்டைகள் எண்ணிக்கையில்லை அப்படி சண்டை செய்து பின்னர் எல்லோரையும் மணலாற்றுக்கு வரும்படி கூறினார்கள் அங்கேயும் பெரும்காடு
அது எங்களுக்கு பலக்கமாயிற்று 
கவியரசி எல்லோரையும் விடா நன்றாக சண்டை செய்வாள்
சண்டை தொடங்கியவுடன் எதிரிக்கு போகும் ரவை இவளின் துப்பாக்கியால்தான் அப்படி வேகம்.

எமது அமைப்பின் பொருப்பாளர்கள் இவளின் திரமையைக்கண்டு இவளை"வேவுப்பிரிவுக்கு மாற்றம்
செய்தார்கள்..

அங்கேயும் திரம்படச்செயப்பட்டாள் 
எதிரின் முகாமுக்குள்ளே"புகுந்து எதிரியின் உணவுகளை"எமக்குத்தருவாள்.
அப்படி துணிச்சளாக செயற்பட்ட கவியரசி. 

எதிரியின் அமைவிடஙககளை நன்றாக"வரைந்து"தருவாள் இவளுக்கு 30உறுப்பினரகள் வழங்கப்பட்டிருந்தது.
கவியரசி வீரச்சாவைத்தழுவும் காலம் நெருங்க அவளின் வேகம் இன்னும் ஒருமடங்கு அதிகரித்தது.

அன்று அதிகாலை 4.30மணியிருக்கும் அது
மணலாறு பிரதேசம் எதிரி எங்களிடம் கடுமையா சண்டை செய்கின்றான். 
அந்த சண்டையில் 5பெண்போராளிகள் காயம் அவர்களை பின்னுக்கு அனுப்பி நானும் கவியரசி மற்றும் பெயர் கூற முடியாத நண்பர்ககள்
எண்ணிப்பார்க இயலாத சண்டை 
9.45மணியிருக்கும் கவியரசி கையில் காயம்.

அப்போது நாங்கள் அவளை பின்னுக்கு அனுப்ப முயன்றோம் ஆனால் அவள் போகவில்லை.
கையில் துணியைக்கட்டிக்கொண்டு சண்டை செய்ய .

நாங்கள் பின்வாங்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது பின்நோக்கீ எதிரிக்கு இழப்புக்களை கொடுத்தோம்.அப்போது கவியரசி இந்த"தாய் மண்ணை முத்தமிட்டாள்.
அவளுக்கும் எதிரிக்கும் 50மீற்றர் தூரம் இருக்கும்.

அவளின் உடளை எதிரி எடுத்துடான்.
உடன் சொர்னம் அண்ணன் கட்டளையிட்டார் கவியரசின் உடலை"மீற்க வேண்டும் என்றார்.
உடன் எங்கள் போராளிகளுக்கு அதிகமானோருக்கு காயம்.
அந்த காயத்தையும் எம்போராளிகள் பார்க்காமல் மீண்டும் சண்டையிட்டு எங்கள் தோழி கவியரசியின் உடலை மீட்டனர்

அந்த மீற்புக்காக 5போராளிகள் வீரச்சாவடைந்தார்கள்.
2.00மணியிருக்கும் சண்டைமுடியும் நேரம்.
அப்போது அந்த முகத்தில் இருந்த சிரிப்பை அவள்" வீரச்சாவின் பின்னரும் கண்டேன்.

ஆனால் இன்று அவள் துயிரயில் இருக்கின்றாள்.
எனது தோழியின் வீரச்செயலுக்கு எமது எதிரி ஈடினையாகமாட்டான்.

இந்த"கவியரசியின் இலச்சியத்தை 
நாம் மீட்டேடுப்போம்.இந்த சமரில் 14போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
எம்மண்மீற்புக்கா வீரச்சாவைத்தலுவிய அனைத்து மாவீரர்களுக்கும்  இந்த கவியரசியின் இலச்சியத்தையும்.
நாம் வெகு விரேவில் மிற்போம் இனியும் இவளின் பெற்றோருக்கு பிள்ளையாக பிறப்பாளா இந்த
 கவியரசி....

கவியரசியே உன் தோழி என்னால் இப்போதூ இதைமட்டும்தான் செய்ய முடியும் உன் உறவுகள் ஈழத்தில் நான் வேறு நாட்டில் ..

மீண்டும் போர் தொடங்கட்டும் உன் இலச்சியத்தை நான் மீற்பேன்.
என்றும் உன் தோழி
நன்றி
முல்லை அரசி...
« PREV
NEXT »

No comments